லெஜண்ட் சரவணாவின் புதிய படம்.. அவரே கொடுத்த சூப்பர் அப்டேட் என்ன தெரியுமா?
சென்னை: லெஜண்ட் சரவணா தமிழ்நாட்டில் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவர். முதலில் விளம்பரத்தில் மட்டும் தலைகாட்டிவந்த அவர் ஹீரோவாக அறிமுகமானார். தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்த அவர் அடுத்ததாக இன்னொரு படத்திலும் நடித்துவருகிறார். இந்நிலையில் அந்தப் படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார் சரவணன்.
துணிக்கடைகளில் மிகப்பெரிய சாம்ராஜ்யாம் செலுத்துவது தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ். தற்போது அதன் உரிமையாளராக லெஜண்ட் அருள் சரவணன் இருக்கிறார். தனது கடையை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் ஆரம்பத்தில் விளம்பர படங்களில் தோன்றினார். அவருடன் ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் நடித்தனர்.
தி லெஜண்ட்: இதனையடுத்து தி லெஜண்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார் லெஜண்ட் அருள் சரவணன். இந்தப் படத்தை இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி இயக்கியிருந்தனர். கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். விவேக், பிரபு, நாசர் உள்ளிட்டோரும் படத்தில் நடித்திருந்தனர். படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
ட்ரோல் செய்த நெட்டிசன்ஸ்: படத்துக்கு தோல்வியை கொடுத்த ரசிகர்கள் அருள் சரவணனையும் கடுமையாக ட்ரோல் செய்தனர். அவரது படத்தில் நடித்திருக்கும் காட்சிகளை பகிர்ந்தும் கிண்டல் செய்துவந்தனர். அதேசமயம் நடிப்பதற்கு யார் வேண்டுமானாலும் உரிமை இருக்கிறது. லெஜண்ட் அண்ணாச்சி விஷயத்தில் நெட்டிசன்கள் கொஞ்சம் ஓவராகவே போகின்றனர் என ஒரு தரப்பினர் தங்களது கண்டனத்தையும் பதிவு செய்தனர்.

அடுத்த படம்: இப்போது தனது இரண்டாவது படத்திலும் நடித்துவருகிறார் அவர். சூழல் இப்படி இருக்க தனது உறவினரின் திருமணத்தில் கலந்துகொண்ட லெஜண்ட் சரவணன் அந்தப் படம் குறித்து கூறுகையில், "என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பும், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் நிறைவடையும். படத்தை தீபாவளிக்கு உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
படம் எப்படி இருக்கும்: மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில் என அனைத்து சுவாரசிய அம்சங்களும் நிறைந்து இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும், டைட்டிலும் மாஸாக இருக்கும். ஒரு புதிய ஜானரில் இப்படம் அனைவரையும் கவரும். படம் குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும். மொத்தத்தில் இந்த தீபாவளி நம்ம தீபாவளியாக, அனைவரின் தீபாவளியாக இருக்கும். நன்றி, வணக்கம்" என தெரிவித்தார்.
தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இப்படத்தை வெற்றி மற்றும் பாராட்டுகளை குவித்த 'கருடன்' திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார். 'காக்கி சட்டை', 'கொடி', உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களையும் இவர் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











