விளம்பரம் எல்லாம் டிரெய்லர் தான்.. ஹீரோவாகிறார் ‘லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்.. அப்போ ஹீரோயின்?

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

சென்னை: லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் மூலம் மக்களிடையே பிரபலமான சரவணன் விரைவில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிலருக்கு மட்டும் அவர்கள் எதிர்பாராத சமயத்தில் வாய்ப்புகள் தானாக வந்து வாசல் கதவைத் தட்டும். அதன் மூலம் அவர்கள் எளிதாக பிரபலமாகி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன்.

Legend Saravanan to act in a film now

தமன்னாவுடனும், ஹன்சிகாவுடனும் அவர் நடித்த விளம்பரங்கள் மக்களிடையே மிகவும் பிரபலம். இப்போது வேறு பிரபல நடிகைகள் யாரும் இல்லாமலேயே, அவர் மட்டும் தனியாக விளம்பரங்களில் கலக்கி வருகிறார்.

இந்நிலையில், விரைவில் அவர் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த படத்தை பிரபலமான இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விளம்பரங்களுக்கே அப்போது முன்னணியில் இருந்த ஹன்சிகா, தமன்னா ஆகியோரை தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தவர் சரவணன். எனவே நிச்சயம் இப்படத்தில் இவருக்கு ஜோடியை வேற லெவளுக்கு எதிர்பார்க்கலாம்.

விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X