அடுத்த முதலமைச்சர் அண்ணாச்சியா?கொளுத்திப்போட்ட தி லெஜண்ட் ஹீரோயின்.. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்!

சென்னை: பான் இந்திய படமாக உருவாகி உள்ள லெஜண்ட் சரவணனின் தி லெஜண்ட் திரைப்படத்துக்கான இந்தி புரமோஷனல் பிரஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது.

அதில், அழகாக இந்தியில் பேசி அசத்தினார் லெஜண்ட் சரவணன். அப்போது, அடுத்த முதலமைச்சரே அண்ணாச்சிதான் என தி லெஜண்ட் படத்தின் நாயகி ஊர்வசி ரவுத்தேலா பேசிய வீடியோ டிரெண்டாகி வருகிறது.

அதனை ஷேர் செய்து ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள ட்வீட்டுக்கு கீழ், அப்போ அண்ணாச்சி படம் ரிலீஸ் ஆவது டவுட்டு தான் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இந்த வார ரிலீஸ்

இந்த வார ரிலீஸ்

வரும் வியாழக்கிழமை ஜூலை 28ம் தேதி லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி உள்ள தி லெஜண்ட் திரைப்படம் வெளியாகிறது. உல்லாசம், விசில் உள்ளிட்ட படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் பான் இந்தியா படமாக இந்த படம் 5 மொழிகளில் உருவாகி இருக்கிறது. லெஜண்ட் சரவணன் அறிமுகமாக உள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா தமிழில் அறிமுகமாகிறார்.

சூடு பறக்கும் புரமோஷன்

சூடு பறக்கும் புரமோஷன்

2500 திரையரங்குகளில் தனது படத்தை ரிலீஸ் செய்கிறார் லெஜண்ட் சரவணன். அதற்காக நடிகைகள் ஊர்வசி ரவுத்தேலா மற்றும் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட ஊர்வசி ரவுத்தேலா உள்ளிட்டோரை அழைத்துக் கொண்டு பரபரப்பாக புரமோஷன் செய்து வருகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை வசூல் ரீதியாக வெற்றியடைய வைக்க அவர் எடுத்து வரும் முயற்சிகள் எல்லாம் என்ன ஆகப் போகிறது என்பது இன்னும் 2 தினங்களில் தெரிந்து விடும்.

ஊர்வசி ரவுத்தேலா பேச்சு

ஊர்வசி ரவுத்தேலா பேச்சு

ஹைதராபாத், மும்பை என பான் இந்தியா ரிலீசுக்காக பறந்து பறந்து பிரஸ்மீட்களை நடத்தி வருகிறார் லெஜண்ட் சரவணன். இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற பிரஸ்மீட்டில் தி லெஜண்ட் படத்தின் ஹீரோயின் ஊர்வசி ரவுத்தேலா, கிண்டலாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பியது. அடுத்ததாக தமிழ்நாட்டின் முதல்வராகவே இவர் ஆகிவிடுவார் என்று பேசியதும், லெஜண்ட் சரவணன், கொஞ்ச நேரம் சும்மா இரும்மான்னு சொல்லும் காட்சிகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

அடுத்த முதல்வர் அண்ணாச்சி தான்

அடுத்த முதல்வர் அண்ணாச்சி தான்

"அடுத்த முதலமைச்சர் அண்ணாச்சிதான் - மும்பை ப்ரெஸ் மீட்டில் லெஜண்ட் நாயகி உறுதியாக சொன்ன தகவல். உதயநிதிக்கு போட்டியாக களத்தில் குதிக்கிறாரா அண்ணாச்சி?" என பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா பேசிய வீடியோவை ஷேர் செய்து ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்வீட் டிரெண்டாகி வருகிறது. தி லெஜண்ட் படத்துக்கு பலமான புரமோஷன் ஆரம்பிச்சிட்டீங்க போல என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ரிலீஸ் டிலே தான்

ரிலீஸ் டிலே தான்

ஆஹா.. அந்த ஹீரோயின் பண்ண வேலைக்கு படம் ரிலீஸ் ஆகுறது நிச்சயம் டிலே தான் என நெட்டிசன்கள் ப்ளூ சட்டை ட்வீட்டுக்கு கீழ் கமெண்ட் போட்டு வருகின்றனர். மேலும், நடிகராக லெஜண்ட் சரவணன் ஆக விரும்புவதற்கு காரணமே அடுத்ததாக அவர் அரசியலில் குதிப்பதற்காகத்தானா? என்றும் கேள்விகளை எழுப்பி விளாசி வருகின்றனர். இந்த வாரம் லெஜண்ட் உங்க கையில் சிக்கிட்டாரா ப்ளூ சட்டை என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X