Leader Teaser: அடேங்கப்பா.. தளபதி பட டீசர் போல மிரட்டுதே.. லெஜண்ட் சரவணனின் ‘லீடர்’ டீசர் எப்படி இருக்கு?

சென்னை: லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் லெஜண்ட் சரவணன் சினிமாவில் நடிக்க முடிவெடுத்த நிலையில், முதல் படத்தை அவரை வைத்து பல விளம்பரப் படங்களை இயக்கிய ஜேடி - ஜெர்ரி இயக்கினர். பெரிய பட்ஜெட்டில் அந்த படம் பாலிவுட் ஹீரோயின் ஊர்வசி ரவுத்தேலாவை எல்லாம் வைத்து எடுக்கப்பட்டாலும் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை.

மேலும், அவரையும் அந்த படத்தையும் பலரும் ட்ரோல் செய்தனர். ஆனால், அதற்கெல்லாம் துவண்டு விடாமல் இதே சினிமாவில் சாதித்துக் காட்ட வேண்டும் என எதிர்நீச்சல், காக்கிச் சட்டை, கருடன் படங்களை இயக்கிய ஆர்.எஸ். செந்தில்குமார் இயக்கத்தில் லீடர் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Legend Saravanan s action and emotional packed Leader Teaser out now
Photo Credit:

வெங்கடேஷ் ஒளிப்பதிவில் மகேஷ் மேத்யூ ஸ்டன்ட் காட்சிகளில் பிரதீப் ராகவின் கட்ஸில் உண்மையாக ஒரு விஜய் படத்தின் ஆக்‌ஷன் டீசரை பார்த்தது போன்ற உணர்வை லீடர் டீசர் தருகிறது. சூரிக்கு தரமான வெற்றியை கொடுத்த துரை செந்தில்குமார் லெஜண்ட் சரவணனுக்கும் இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

லீடர் டீசர் மிரட்டுது: தனது மகளுடன் வாழ்வதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவேன் என லெஜண்ட் சரவணன் சொல்லும் காட்சியில் இருந்து அந்த ட்ரைன் ஃபைட் எல்லாம் வேறலெவல். மேலும், ஆண்ட்ரியா, ஷாம், சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்து தரமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், லீடர் டீசர் படம் பந்தயம் அடிக்கும் என்கிற நம்பிக்கையை விதைக்கிறது. துரை செந்தில்குமார் மற்றும் லெஜண்ட் சரவணன் இருவருமே போட்டுள்ள உழைப்பு தெளிவாக தெரிகிறது.

தனுஷுடன் மோதல்: வரும் ஏப்ரல் 30ம் தேதி தனுஷின் 'கர' படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், லெஜண்ட் சரவணனின் 'லீடர்' படமும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். தேர்தல் நெருங்குவதால் சரியான ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கவில்லை. ஏப்ரல் மாதம் சம்மரை டார்கெட் செய்து வெளியாகும் படங்களுடன் லீடர் படமும் கடும் போட்டி போடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X