Legend Saravanan: காஷ்மீரில் துவங்கும் லெஜெண்ட் சரவணன் பட சூட்டிங்.. காஷ்மீர் போன காரணம் இதுதானா!
சென்னை: பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் சினிமாவில் ஹீரோவாக நடித்து தி லெஜெண்ட் என்ற படத்தை கடந்த 2022ம் ஆண்டில் வெளியிட்டிருந்தார். இந்த படம் பரவலாக நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் படம் வெற்றி படமாகவும் அமைந்தது. இந்தப் படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் நடிக்கவுள்ள படத்தின் சூட்டிங் விரைவில் துவங்க உள்ளது. முதல் படமான தி லெஜெண்ட் படத்தையே பான் இந்தியா படமாக வெளியிட்டு மாஸ் காட்டினார் லெஜெண்ட் சரவணன்.
இந்நிலையில் அவரது அடுத்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் விரைவில் ஷூட்டிங் துவங்க உள்ளது. இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை துரை செந்தில்குமார் நிறைவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது, படத்தின் சூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்தில் பூஜையுடன் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் காஷ்மீரில் தன்னுடைய போட்டோஷுட் ஒன்றை எடுத்து அதை வெளியிட்டிருந்தார் லெஜெண்ட் சரவணன். லியோ படத்தின் சூட்டிங் நடந்தபோது அவர் காஷ்மீரில் இந்த போட்டோஷுட்டை எடுத்திருந்தார்.

லெஜெண்ட் சரவணன்: பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான படம் தி லெஜெண்ட். லெஜெண்ட் சரவணன், விவேக், ஊர்வசி ரவுத்தாலா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி படமாக மாறியது. இந்த படத்திற்கு சிறப்பான விமர்சனங்களும் கிடைத்த நிலையில் படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முன்னதாக தன்னுடைய கடையின் விளம்பரங்களில் தமன்னா, ஹன்சிகா போன்றவர்களுடன் இணைந்து நடித்திருந்தார் லெஜெண்ட் சரவணன். இந்த விளம்பரங்கள் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற போதிலும் கடைக்கு நல்ல விளம்பரத்தை பெற்றுத் தந்தன.
தி லெஜெண்ட் படம்: இந்நிலையில் கடை விளம்பரங்களை இயக்கியிருந்த இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்கத்திலேயே தி லெஜெண்ட் படமும் உருவானது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்த நிலையில் படத்தின் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் தன்னுடைய இரண்டாவது படத்தில் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் போட்டோசூட் கடந்த 22ம் தேதி சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
லெஜெண்ட் 2 படத்தின் போட்டோஷுட்: விரைவில் இதன் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே, இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்க உள்ளதாகவும் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீருக்கு லெஜெண்ட் சரவணன் சென்றிருந்தார். அங்கு அவர் பனிபடர்ந்த சூழலில் பல புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது உருவாகவுள்ள லெஜெண்ட் சரவணன் 2 படத்திற்கான லொகேஷனை தேர்வு செய்யவே அவர் முன்னதாக காஷ்மீர் சென்றாரா என்று ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

துரை செந்தில்குமாரின் அடுத்தடுத்த படங்கள்: முதல் படத்தை வெற்றிப் படமாக மாற்றியிருந்த லெஜெண்ட் சரவணன் தற்போது இரண்டாவது படத்தையும் தானே தயாரித்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த படமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம். எதிர்நீச்சல், காக்கிச்சட்டை உள்ளிட்ட வெறறிப்படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் துரை செந்தில்குமார். அடுத்ததாக சூரியின் கருடன் படத்தை இயக்கியுள்ள துரை செந்தில்குமார் லாரன்ஸ் லீட் கேரக்டரில் நடிக்கும் அதிகாரம் மற்றும் நயன்தாராவின் நயன்தாரா81 படத்தையும் அடுத்தடுத்து இயக்கவுள்ளார். இதனிடையே லெஜெண்ட் சரவணனின் 2வது படத்தையும் அவர் இயக்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications











