லெஜண்ட் சரவணாவின் ‘லீடர்’ எப்போ ரிலீஸ் தெரியுமா?.. பிரம்மாண்ட இசைவெளியீட்டு விழா அப்டேட்டும் இதோ!

சென்னை: துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணா தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள 'லீடர்' திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என டீசர் வெளியீட்டின் போது அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதம் 3ம் தேதி படம் வெளியாகும் என லேட்டஸ்ட் தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும், இந்த மாத இறுதியில் லெஜண்ட் சரவணா நடித்துள்ள லீடர் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Legend Saravana s Leader movie release date update and Audio Launch date is here
Photo Credit:

ஜவுளிக்கடை, நகைக்கடை என மிகப்பெரிய தொழிலதிபராக வலம் வந்த லெஜண்ட் சரவணா 'லெஜண்ட்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அவரது 2வது படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

17 மில்லியன் வியூஸ்: எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி, பட்டாஸ் மற்றும் கருடன் படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணா நடித்துள்ள 'லீடர்' படத்தின் டீசர் வெளியாகி 4 நாட்களில் இதுவரை 17 மில்லியன் வியூஸ் கடந்துள்ளது. டீசரை பார்க்கும் போதே கண்டிப்பாக இந்த படம் சிறப்பாக இருக்கும் என்றும் டீசர் கட்ஸ் எல்லாம் தரமாக தாறுமாறாக உள்ளதாக சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் கருத்து தெரிவித்தனர். பாயல் ராஜ்புது, ஆண்ட்ரியா, ஷாம், சந்தோஷ் பிரதாப் என ஏகப்பட்ட பிரபலங்களும் இந்த படத்தில் நடித்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

லீடர் ரிலீஸ் தேதி: லெஜண்ட் சரவணா நடித்துள்ள லீடர் திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகப் போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மிக விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆடியோ வெளியீட்டு விழா தேதி குறித்த அப்டேட்டும் கசிந்துள்ளது.

பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா எப்போது?: லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏகப்பட்ட முன்னணி நடிகைகளை வைத்து அட்டகாசம் செய்தார் லெஜண்ட் சரவணன். இந்நிலையில், வரும் மார்ச் 21ம் தேதி சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் லீடர் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. வெற்றிமாறன் உள்ளிட்ட ஏகப்பட்ட திரை பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X