பாடகி லதா மங்கேஷ்கருக்கு திடீர் உடல் நலக்குறைவு.. ஐசியூவில் தீவிர சிகிச்சை!

மும்பை: பாடகி லதா மங்கேஷ்கர் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லெஜன்ட் பாடகியான லதா மங்கேஷ்கர் 1929ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தார். 1942ஆம் ஆண்டு முதல் பாடி வருகிறார் லதா மங்கேஷ்கர்.

இதுவரை ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள லதா மங்கேஷ்கர், சமூக வலைதளங்களிலும் செம ஆக்டிவாக உள்ளார். 77 ஆண்டுகளாக இசைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

மூச்சு திணறல்

மூச்சு திணறல்

நாட்டின் உயரிய விருதுகளான பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன், பல தேசிய விருதுகள் என ஏராளமான விருதுகளையும் குவித்திருக்கிறார் லதா மங்கேஷ்கர். இந்நிலையில் 90 வயதான லதா மங்கேஷ்கருக்கு நள்ளிரவு அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

ஐசியூவில் தீவிர சிகிச்சை

ஐசியூவில் தீவிர சிகிச்சை

இதனைதொடர்ந்து அதிகாலை 1.30 மணியளவில் மும்பையில் உள்ள பிரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

நிமோனியா காய்ச்சல்

நிமோனியா காய்ச்சல்

அவரது இதயத்தின் இடது வென்ட்ரிகிள் செயலிழந்திருப்பதாகவும் அவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரீச் கேன்ட்டி மருத்துவமனையின் மருத்துவர் பிரதித் சாம்டானி தெரிவித்திருக்கிறார்.

ரசிகர்கள் சோகம்

ரசிகர்கள் சோகம்

ஆரம்பத்தில் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததாக கூறியுள்ள மருத்துவர் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். லதா மங்கேஷ்கர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

உறவினர் தகவல்

உறவினர் தகவல்

இதனிடையே லதா மங்கேஷ்கரின் உறவினரான பாடகி ரச்சனா ஷா வெளியிட்டுள்ள விளக்கத்தில், "லதா மங்கேஷ்கர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது நல்ல உடல்நலத்தோடு உள்ளார்.

மீண்டு வருவார்

மீண்டு வருவார்

தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வருவார். அவரது வயதின் காரணமாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். மற்றபடி அவர் நலமுடனே உள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X