twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காலத்தால் அழியாத காமெடி நாயகன் கவுண்டமணி பிறந்தநாள் ஸ்பெஷல்

    |

    சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல காமெடியனாக இருந்தவர் கவுண்டமணி. 1980, 90 களில் தமிழ் சினிமாவை தனது நக்கல் பேச்சு, கவுண்ட்டர்களால் ஆட்சி செலுத்திய கவுண்டமணி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கவுண்டமணி - செந்தில் காம்போவில் உருவான காமெடிகள் காலத்தால் அழிக்க முடியாதவை.

    1960ல் துவங்கி 2000 ஆண்டின் இறுதி வரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தமிழ் சினிமாவின் காமெடி மன்னனாக வலம் வந்தவர் கவுண்டமணி. இவரது கவுண்ட்டர் டயலாக்குகள் மிக பிரபலம். திரையில் மட்டுமல்ல திரைக்கு பின்னாலும் இவர் கொடுத்த கவுண்ட்டர்கள் தான் இவரை சினிமாவில் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

    ஹாலிவுட் ஸ்டைலில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்...இது வேற லெவல் ப்ரோமோஷனா இருக்கே ஹாலிவுட் ஸ்டைலில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்...இது வேற லெவல் ப்ரோமோஷனா இருக்கே

    கவுண்டமணியின் முதல் படம்

    கவுண்டமணியின் முதல் படம்

    ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் கவுண்டர் என்ற ரோலில் நடித்து வந்ததால், அதையே அடைமொழியாக வைத்து கவுண்டமணி என அழைக்கப்பட்டு, பிறகு அதே பெயரிலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கவுண்டமணி. 1964 ம் ஆண்டு தேனும் பாலும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் சிறு சிறு ரோல்களில் நடித்து வந்த கவுண்டமணி, 1977 ம் ஆண்டு 16 வயதினிலே படத்தில் நடித்த ரோல் தான் பேசும் படி அமைந்தது. சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் கவுண்டமணி.

    வெற்றி காமெடி காம்போ

    வெற்றி காமெடி காம்போ

    பெரும்பாலும் காமெடி ரோல்களிலேயே நடித்த கவுண்டமணி, செந்திலுடன் இணைந்து நடித்த கரகாட்டக்காரன் படம் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் படமானது. இந்த படத்தில் கவுண்டமணி - செந்தில் நடித்த காட்சிகள் மட்டும் 28 நாட்கள் படமாக்கப்பட்டது. கவுண்டமணி - செந்தில் காம்போ இணைந்து நடித்த 100வது படம் இதுவாகும். செந்தில்- கவுண்டமணி காம்பேவிற்கு அடுத்த படியாக, பெரிய அளவில் வெற்றி பெற்ற காம்போ கவுண்டமணி - சத்யராஜ் ஜோடி. இவர்களின் அரசியல் நையாண்டிகள் மிக பிரபலம்.

    மறக்க முடியுமா இந்த டயலாக்கை

    மறக்க முடியுமா இந்த டயலாக்கை

    கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப்பழ காமெடி, சொப்பண சுந்தரி காமெடி, சூரியன் படத்தில் வரும் காந்தகண்ணழகி, ஸ்டார்ட் மியூசிக், அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா போன்ற டயலாக்குகள் தற்போது வரை மீம்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அட்ரா சக்க..அட்ரா சக்க, உலக நடிப்புடா சாமி போன்ற டயலாக்குகள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் டயலாக்காக இருந்து வருகிறது.

    நடிப்பை நிறுத்திய கவுண்டமணி

    நடிப்பை நிறுத்திய கவுண்டமணி

    2000 ஆண்டின் பிற்பகுதியில் சர்க்கரை நோய், வயது முதிர்வின் காரணமாக சுவாச பிரச்சனை ஆகியவற்றின் காரணமாக சினிமாக்களில் நடிப்பதை நிறுத்தினார் கவுண்டமணி. மிக அரிதாகவே சினிமா விழாக்கள் போன்றவற்றில் கலந்து கொள்கிறார். கடைசியாக 2016 ம் ஆண்டு வாய்மை என்ற படத்தில் கவுண்டமணி நடித்திருந்தார்.

    English summary
    Actor Goundamani celebrates his birthday today. Fans and celebrities shared their wishes and working experience with Goundamani. Fans shared famous Goundamani dialogue memes in social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X