தனுஷுக்கு போட்டியாக மாறிய பிரம்மானந்தம்.. அப்துல் கலாம் அய்யாவா அப்டியே மாறிட்டாரே பாஸ்!
சென்னை: நடிகர் தனுஷ் திடீரென பயோபிக் படங்களிலும் அக்கறை செலுத்த ஆரம்பித்துள்ளார். இசைஞானி இளையராஜா பயோபிக் படத்தில் விரைவில் நடிக்கவுள்ள தனுஷ் அடுத்ததாக ஓம் ராவத் இயக்கத்தில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஆகவும் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளியானது.
இந்நிலையில், டோலிவுட்டின் மிகப்பெரிய காமெடி ஜாம்பவான் பிரம்மானந்தம் அப்துல் கலாம் கெட்டப்பில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தான் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவராகவே மாறிவிட்டாரே பிரம்மானந்தம் என்ன மேட்டர் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அப்துல் கலாம் தான் இன்ஸ்பிரேஷன்: தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய காமெடி ஜாம்பவானான பிரம்மானந்தம் கடடந்த ஆண்டு தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார். தனக்கு ரொம்பவே இன்ஸ்பிரேஷனான தலைவர்கள் லிஸ்ட்டை அவர் பட்டியலிட்ட போது அம்பேத்கர், அப்துல் கலாம் உள்ளிட்ட பெயர்களை குறிப்பிட்டு இருந்தார். டோலிவுட்டை தாண்டி தமிழில் கில்லி, மொழி போன்ற பல படங்களில் காமெடி நடிகராக கலக்கியுள்ளார்.
அப்துல் கலாமாகவே மாறிட்டாரு: இந்நிலையில், அப்துல் கலாம் கெட்டப்பில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோவை சற்றுமுன் காமெடி நடிகர் பிரம்மானந்தம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அதற்கு கேப்ஷனாக, "Dream, dream, dream. Dreams transform into thoughts and thoughts result in action" என பதிவிட்டுள்ளார். அப்துல் கலாம் "கனவு காணுங்கள்" என இளைஞர்களை நோக்கி சொன்னதை குறிக்கும் வகையில் கேப்ஷன் போட்டுள்ளார்.
தனுஷுக்கு செம போட்டி: நடிகர் தனுஷ் அப்துல் கலாம் பயோபிக்கில் நடிக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில், புதிதாக ஏதோ ஒரு படத்தில் பிரம்மானந்தம் அப்துல் கலாம் கெட்டப்பில் நடிக்கப் போவது உறுதியாகியுள்ளது. அதற்காகத்தான் இப்படியொரு கெட்டப்பை அவர் போட்டுள்ளாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அந்த படம் பற்றிய அப்டேட்டை சீக்ரெட்டாகவே வைத்துள்ளனர். தனுஷை விட இவருக்கு அப்துல் கலாம் கெட்டப் பக்காவா பொருந்துகிறது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications