அடேங்கப்பா.. ஆடி முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை வடிவேலுவிடம் இத்தனை விலை உயர்ந்த கார்கள் இருக்கா?
சென்னை: 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கலக்கிய வைகைப் புயல் தற்போது மீம்ஸ் உலகின் முடிசூடா மன்னனாகவே திகழ்கிறார்.
அரசியல் பிரச்சாரம் காரணமாக தமிழ் சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ள வடிவேலு மீண்டும் எப்போது புதிய படத்தில் கமீட் ஆவார் என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சினிமா ஒரு பக்கம் இருக்க, வைகைப் புயல் வடிவேலு ஒரு தீவிர கார் பிரியராம். ஆடி க்யூ 7 கார் முதல் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வரை ஏகப்பட்ட உலகின் விலை உயர்ந்த கார்களின் கலெக்ஷனை வடிவேலு வைத்துள்ளார்.

மீம்ஸ் மன்னன்
வடிவேலு மட்டும் இல்லையென்றால், பல இன்ஜினியர்கள் மீம் கிரியேட்டர்களாக மாறி புது தொழிலையே தமிழ்நாட்டில் உருவாக்கி இருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அரசியல், சினிமா, சமூக பிரச்சனை என எல்லாவற்றுக்கும் வடிவேலு நடித்த படங்களின் காட்சிகள் மீம்களாக போடவும், வீடியோ மீம்களாக ரசிக்கவும் உதவி வருகின்றன.

கார் பிரியர்கள்
தல அஜித், தளபதி விஜய், சியான் விக்ரம் போலவே வைகைப் புயல் வடிவேலுவுக்கும் கார்கள் மீது அலாதியான பிரியம் உள்ளதாம். 30 வருடங்களாக எத்தனையோ படங்களை வெற்றிப் படமாக்க உழைத்த வடிவேலுவிடம் உலகின் விலை உயர்ந்த கார்கள் எல்லாம் இருக்கின்றன. என்ன என்ன கார்களை தனது கலெக்ஷனில் வடிவேலு வைத்துள்ளார் என்பதை பார்ப்போம்.

ஆடி க்யூ 7
இந்தியாவில் அதிகளவில் விற்பனையான கார் என்றே முத்திரை குத்தப்பட்ட Audi Q7 காரை காமெடி நடிகர் வடிவேலு தனது கராஜில் வைத்துள்ளார். 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை இந்த கார் லிமிடட் வெர்ஷனாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 550Nm முதல் 1000Nm வரை இந்த காரின் ரேஞ்ச் இருக்கும்.

ஜாகுவார் எக்ஸ் ஜே
ஏகப்பட்ட திரைப்படங்களில் ஆயிரக் கணக்கான வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அசையா சரித்திரமாக இருக்கும் வைகைப் புயல் வடிவேலுவிடம் ஜாகுவார் கார்களிலேயே அதிக சொகுசு வாய்ந்த Jaguar XJ கார் உள்ளது. இந்த காரில் மூன்று பவர்ஃபுல் இன்ஜின்கள் உள்ளன.

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்
சொகுசு கார் என்றாலே பிஎம்டபிள்யூ கார் இல்லாமலா? வைகைப் புயல் வடிவேலுவிடம் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரும் உள்ளது. மிகவும் விரும்பி இந்த காரில் தான் பல இடங்களுக்கு வடிவேலு சென்று வருவார் என்றும் கூறுகின்றனர். இந்த SUV காரில் 3 லிட்டர் இன்ஜின் இன்லைன் - 6 டீசர் என்ஜின் மற்றும் 6.0 ட்வின் டர்போ V12 பெட்ரோல் இன்ஜின் என இரண்டு சக்தி வாய்ந்த இன்ஜின்கள் உள்ளன.

பென்ட்லி கான்டினென்டல் ஜிடி
சர்வதேச பிரபலங்களால் விரும்பி வாங்கப்படுகிற சொகுசு காரான பென்ட்லி கான்டினென்டல் ஜிடி காரையும் தனது கார் கலெக்ஷனில் நடிகர் வடிவேலு வைத்துள்ளாராம். இந்தியாவில் இந்த காரை வெகு சில பிரபலங்களே வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

போர்ஸ் 911 கூப்பே
ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான Porsche 911 Coupe காரையும் நம்ம காமெடி கிங் வடிவேலு வைத்திருப்பது ஆச்சர்யமான விஷயம் தான். சொகுசு கார்களை வாங்கி பராமரிப்பதை பல பிரபலங்கள் ஹாபியாகவே செய்து வருகின்றனர். வடிவேலுக்கும் கார்களை பராமரிப்பது ஓட்டுவது, லாங் டிரைவ் செல்வது பிடித்த விஷயமாம்.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்
கார்களின் அசுரன் என்பதை பெயரிலேயே கொண்டுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரையும் நடிகர் வடிவேலு தனது கார் கலெக்ஷனில் வைத்துள்ளது சிறப்பான ஒன்று. சீக்கிரமே வடிவேலும் பிரச்சனைகள் தீர்ந்து மீண்டும் வெள்ளித்திரையில் வடிவேலு முன்பை போலவே தனது காமெடிகளால் மிரட்ட வேண்டும் என்பதே கோடிக் கணக்கான ரசிகர்களின் ஆசை.


Click it and Unblock the Notifications











