பாசத்துக்குரிய பாரதிராஜா உயிரிழப்பு.. மகன் போன வலியோடு இயக்குநர் இமயமும் போய்விட்டார்

சென்னை: இயக்குநர் இமயம் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் பாரதிராஜா. பல ஹிட் படங்களை கொடுத்த அவர்; வயோதிகம் காரணமாகவும், மகன் உயிரிழந்ததை தாங்கிக்கொள்ள முடியாமலும் உடல்நல பாதிப்புக்கு ஆளானார். அவருக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். வயது 84. அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருகிறது.

16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாரதிராஜா. முதல் படமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து அவர் இயக்கிய கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், மண்வாசனை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்கு சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். அவரது பெரும்பாலான படங்கள் கிராமத்து மண் வாசனையை ரசிகர்களுக்கு கடத்தின. இதன் காரணமாக அவர் இயக்குநர் இமயம் என்று கொண்டாடப்பட்டார்.

Legendary Director Bharathiraja Passes Away at 84 Tamil Cinema Mourns a Giant
Photo Credit:

பல அறிமுகங்கள்: பாரதிராஜா இதுவரை தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட நடிகர்கள், நடிகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர்களில் சிலர் உயிரிழந்துவிட்டார்கள். பலர் இந்திய அளவில் இப்போது மிகச்சிறந்த நடிகர்கள், நடிகைகளாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள். ராதிகா, ராதா,ரேவதி என அவர் அறிமுகப்படுத்திய நடிகைகள், நடிகர்களின் லீஸ்ட் அவரது திரைப்படங்கள் மற்றும் புகழ் மாதிரி நீண்டுகொண்டே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
எங்கள் மாமா பாரதிராஜா இன்னும் இறக்கவில்லை.. இப்படி பேசுவதை நிறுத்துங்கள்.. உறவினர் காட்டம்
எங்கள் மாமா பாரதிராஜா இன்னும் இறக்கவில்லை.. இப்படி பேசுவதை நிறுத்துங்கள்.. உறவினர் காட்டம்

மகன் உயிரிழப்பு: ஒருகட்டத்தில் வயோதிகம் காரணமாக இயக்கத்துக்கு டாட்டா சொல்லிவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார். இயக்கத்தில் எப்படி தனி முத்திரையை பதித்தாரோ அதேபோல் நடிப்பிலும் அசத்தினார். சூழல் இப்படி இருக்க அவரது மகன் மனோஜும் நடிகராகவும், இயக்குநராகவும் திரைத்துறையில் இயங்கினார். அவர் உடல்நல குறைவால் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பாரதிராஜாவை நிலைகுலைய செய்துவிட்டது. ரொம்பவே இடிந்து போய் மன இறுக்கத்தோடு இருந்தார்.

உடல்நல குறைவு:அதோடு சேர்த்து உடல்நல குறைவும் ஏற்பட்டது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் வைத்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. அதனால் கொஞ்சம் உடல்நலம் தேறியது. இதனையடுத்து அவரை நீலாங்கரையில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். அங்கு வைக்கப்பட்டு அவரது உடல்நிலை மருத்துவர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. எப்படியும் மீண்டு வந்துவிடுவார் என்று குடும்பத்தினரும், ரசிகர்களும் அதீத நம்பிக்கையில் இருந்தார்கள்.

உயிரிழந்த பாரதிராஜா: இந்நிலையில் இன்று அதிகாலை அவருக்கு திடீரென மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டது. அளிக்கப்பட்ட சிகிச்சையும் பலன் அளிக்காததால் உயிரிழந்துவிட்டார். அவருக்கு வயது 84 ஆகும். நீலாங்கரையில் இருக்கும் அவரது வீட்டில் வைத்து இறுதி சடங்குகள் நடக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்துவருகின்றன. பாரதிராஜா உயிரிழந்தது அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திரையுலக பிரபலங்களும் அவரது இல்லத்துக்கு செல்ல தொடங்கியிருக்கிறார்கள். இறுதி ஊர்வலம் செல்வதற்கான வாகனங்களும் வீட்டுக்கு வந்திருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X