பழம்பெரும் பாடகி எஸ். ஜானகி உயிரிழந்தார்.. துயரத்தில் திரைத்துறை!
சென்னை: இசை உலகின் அம்மா என ரசிகர்களால் அழைக்கப்படும் எஸ் ஜானகி அம்மா சற்று முன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பாடகி எஸ். ஜானகி: 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி ஆந்திரா மாவட்டத்தில் உள்ள ரேவல்லா என்ற கிராமத்தில் பிறந்தவர் தான் எஸ். ஜானகி. மராத்திய மொழி பேசும் குடும்பத்தில், செஸ்லா ராமமூர்த்தி மற்றும் சத்யவதி தம்பதிக்கு கடைக்குட்டி மகளாக பிறந்தவர் தான் செஸ்லா ஜானகி. சிறுவயதில் இருந்தே இசையின் மீது அதித ஆர்வம் கொண்ட ஜானகி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட இந்திய மொழிகள் பல்வேறு நாட்டு மொழி பாடல்கள் என 80,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார் எஸ் ஜானகி.

துயரத்தில் ஜானகி: ஜானகியின் ஒரே மகனான முரளி கிருஷ்ணா ஜானவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். மகன் இறந்தது துயரத்தில் இருந்த ஜானகி அம்மாள் சற்று முன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவலை ஜானகியின் பேத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில்,எனது அன்பிற்குரிய பாட்டியும், புகழ்பெற்ற பாடகியுமான திருமதி எஸ். ஜானகி அவர்கள் காலமானார் என்ற செய்தியை மிகுந்த துயரத்துடன் பகிர்ந்துகொள்கிறேன். குடும்பத்தினரின் அன்பின் சூழலில் அவர் அமைதியாக இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். எங்கள் மனங்கள் துயரத்தில் ஆழ்ந்திருந்தாலும், அவர் வாழ்ந்த சிறப்பான வாழ்க்கைக்காகவும், காலத்தால் அழியாத தனது இசையின் மூலம் லட்சக்கணக்கானோருக்கு அவர் அளித்த அளப்பரிய மகிழ்ச்சிக்காகவும் நாங்கள் நன்றியுணர்வுடன் இருக்கிறோம்.
உலகைப் பொறுத்தவரை, எண்ணற்ற நினைவுகளோடு கலந்த பாடல்களை வழங்கிய ஒரு மிகச்சிறந்த குரலாக அவர் திகழ்ந்தார். எங்களைப் பொறுத்தவரை, அவர் அன்பான பாட்டியாகத் திகழ்ந்தார்; அவரது கனிவு, எளிமை, கருணை மற்றும் நற்பண்புகள் ஆகியவை என்றென்றும் எங்கள் நினைவில் நிலைத்திருக்கும். இந்தத் துயரமான நேரத்தில், இந்த இழப்பை ஏற்றுக்கொண்டு நாங்கள் துக்கம் அனுசரிக்கும் வேளையில், எங்கள் குடும்பத்தின் தனிப்பட்ட உணர்வுகளையும் தனியுரிமையையும் மதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications