உடல் நலக்குறைவு: ஐ.சி.யு.வில் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்

பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்(91). கடந்த சில மாதங்களாக அவர் உடல் நலக்குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இந்நிலையில் கடந்த வாரம் அவர் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் கால் தவறி விழுந்தார். இதில் அவரது பின்தலையில் பலத்த அடிபட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று காலை அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அவரது மகன்கள் பால்ராஜ் மற்றும் செல்வகுமார் ஆகியோர் மருத்துவமனையில் இருந்து அவரை கவனித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











