அடிதூள்... ஏ.கே61 படத்தில் அஜித்துடன் இணையும் முக்கிய நட்சத்திரம்...வைரலாகும் புதிய தகவல்!
சென்னை : அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் மலையாள உச்ச நட்சத்திரம் முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்ற தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
இதனை ஏறக்குறைய உறுதி செய்யும் வகையில், தயாரிப்பாளர் போனி கபர் அந்த நட்சத்திரத்தை சந்தித்த புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது.
இப்படத்தில் ஹீரோயினாக தபு நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

வலிமை
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் எச். வினோத் போனி கபூர் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து பொங்கல் ரிலீசுக்குத் தயாராக இருந்த நிலையில் கொரோனா 3ஆம் அலை காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

ஏ.கே.61 மோகன்லால்
இதனிடையே, அஜித்தின் 61வது படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளதாகவும், போனி கபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான கதாபாத்திர தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்திய தகவல் படி, மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் மோகன்லால், ஏ.கே.61 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிரகாஷ் முக்கிய ரோலில்
சமீபத்தில் நடிகர் மோகன்லால், தயாரிப்பாளர் போனிகபூரை மும்பையில் சந்தித்தார். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. ஏகே 61 படத்தில் தபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் பிரகாஷ் ராஜும் நடிக்கிறார் என்றும் இணையத்தில் தகவல்கள் தீயாக பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











