"எனக்கு திருமணம் வேண்டாம்.. ஆனா.." - புதிய பந்தத்தில் இணைந்த லேகா வாஷிங்டன்!

By Vignesh Selvaraj

மும்பை : நடிகை லேகா வாஷிங்டன் ஆங்கில சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்து பின்னர் நடிகை ஆனவர். இவர் 'உன்னாலே உன்னாலே', 'ஜெயம் கொண்டான்', 'கல்யாண சமையல் சாதம்', 'அரிமா நம்பி' உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். இதுதவிர பல இசை ஆல்பங்களிலும் பாடி ஆடியுள்ளார்.

இவர் திருமணம் அல்லாத ஒரு உறவு முறையில் இணைந்துள்ளார். இந்தத் தகவலி ட்விட்டரில் தெரிவித்துள்ளார் லேகா வாஷிங்டன்.

லிவிங் டு-கெதர்

லிவிங் டு-கெதர்

லேகா வாஷிங்டனும் மும்பையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் பப்லோ சட்டர்ஜியும் பல ஆண்டுகளாகக் காதலித்து வருகிறார்கள். மும்பையில் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டு கெதராக வாழ்ந்து வந்தார்கள்.

பதிவுத் திருமணம்

பதிவுத் திருமணம்

லேகா வாஷிங்டன் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். பப்லோ சட்டர்ஜி இந்து மதத்தைச் சேர்ந்தவர். இதனால், இரு மதத்தின் சடங்குகள்படியும் திருணம் நடக்கவில்லை. பொதுவான முறையில் பதிவுத் திருமணம் செய்து கொள்வதாகத் தெரிவித்திருந்தனர்.

முறைப்படி திருமணம்

முறைப்படி திருமணம்

இப்போது இவர்கள் திருமணம் மும்பையில் உள்ள அலிபாக்கில் எளிய முறையில் லேகா, பப்லோ சட்டர்ஜி திருமணம் நடைபெற்றது. மோதிரம் மாற்றுதல், தாலி அணிவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் இல்லாமல் நடைபெற்றது.

 DIY பார்ட்னர்ஷிப்

DIY பார்ட்னர்ஷிப்

இதுநாள் வரை லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த லேகா வாஷிங்டன் DIY பார்ட்னர்ஷிப் என்ற முறையில் திருமணம் போல் தன்னுடைய வாழ்க்கை துணையுடன் இணைந்துள்ளார்.

லேட்டஸ்ட் புகைப்படம்

இந்த விழா அண்மையில் உறவினர்கள் மத்தியில் நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, 'திருமணம் எனக்கு வேண்டாம்.. இது திருமணம் இல்லாத Do IT Yoursef Partnership எனத் தெரிவித்துள்ளார் லேகா வாஷிங்டன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X