அப்போ முட்டை.. இப்ப எலுமிச்சை பழம்.. முடியல பிக் பாஸ்.. ஆரியுடன் மீண்டும் மல்லுக்கு நின்ற அனிதா!

சென்னை: பிக் பாஸ் தமிழ் 4 ஏகப்பட்ட விஷயங்களில் முதல் சீசனை காப்பியடித்து வருவதாக ரசிகர்கள் கருத்துக்களை தெறிக்கவிடுகின்றனர்.

முதல் சீசனில் கணேஷ் வெங்கட்ராமின் முட்டை பிரச்சனை இருந்தது போல, இந்த சீசனில் எலுமிச்சை பழத்துக்கு ஹவுஸ்மேட்கள் அடித்துக் கொள்கின்றனர்.

அடி தடி சண்டை எல்லாம் அரை மணி நேரத்தில் சால்வ் ஆகின்ற இடத்தில், உப்புக்கும், லெமனுக்கும் மாசக் கணக்கா போட்டியாளர்கள் அடித்துக் கொள்வது வேடிக்கை என நிஷா மக்களின் மனசாட்சியாக இருந்தே சொல்கிறார்.

அரை எலுமிச்சை பழம்

அரை எலுமிச்சை பழம்

அர்ச்சனாவிடம் அரை எலுமிச்சை பழம் கேட்டதுக்கு கொடுக்கலை என சனம் ஷெட்டி பாலாவிடம் சொல்ல, சரியான நேரத்தில் பாலா அதை தனது இன்ஸ்டன்ட் மம்மியிடம் போட்டுக் கொடுத்து, சனம் ஷெட்டியுடன் சண்டை போட்டார். அந்த சண்டை பிக் பாஸ் வீட்டில் இன்னமும் தொடர்ந்து வருவது வேடிக்கை.

லெமன் 2.0

லெமன் 2.0

அதே மரமா என்பது போல மீண்டும் கிச்சனில் நடக்கும் எலுமிச்சை பஞ்சாயத்து குறித்து நிஷா கேட்க, இது லெமன் 2.0 என சம்யுக்தா நைசா ஆரிக்கும் அனிதாவுக்கும் சண்டையை மூட்டி விட்டு வந்து நிஷா மற்றும் அர்ச்சனாவிடம் கூறினார். ஆரியுடன் இந்த வாரத்தின் முதல் நாளில் சண்டை போட்ட அனிதா, வார இறுதி நாளிலும் ஒரு சண்டையை போட்டு விட்டார்.

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த அனிதா

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த அனிதா

பாலா அண்ட் கோவுடன் இணைந்துள்ள அனிதா சம்பத், சம்யுக்தா எலுமிச்சை பழத்தை எடுத்தது பற்றி பேச மாட்டேன் என்றும், நிஷா பிரிட்ஜில் இருந்து எலுமிச்சை பழத்தை எடுத்ததை பற்றி வேண்டுமானால் கேட்கலாம் எனக் கூறும் போது, அருகே நின்ற ஆரியிடம் நீங்க ஏதும் கேட்க மாட்டீங்களா என சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தார் அனிதா.

ரெண்டு பேருக்கும் முட்டிக்கிச்சு

ரெண்டு பேருக்கும் முட்டிக்கிச்சு

தீபாவளி கொண்டாட்டம் இடையே சண்டையை எதிர்பார்க்கும் பிக் பாஸ் ரசிகர்களுக்காக இந்த ஒரு போர்ஷனையும் வைக்கிறோம் என அனிதாவும் ஆரியும் நல்லாவே காரசாரமா சண்டை போட்டுக் கொண்டனர். சாப்பாடு கொட்டின விஷயத்தில் சனம் ஷெட்டி உடன் சண்டை ஏற்பட்ட நிலையில், மீண்டும் கிச்சன் டீமுடனே சண்டை.

கமலுக்கு வேலை

கமலுக்கு வேலை

இந்த வாரம் கமல் சார் சும்மா வந்து விட்டு போகக் கூடாது என்பதற்காக, ஆரி, சம்யுக்தா, சனம் ஷெட்டி சண்டையை மூட்டி விட்டுள்ளனர். மேலும், பாலாஜி முருகதாஸ், தான் இஷ்டத்துக்கு விளையாடியது. சுசித்ரா கொளுத்திப் போட்ட புகார் எல்லாம் பேசுவார் என தெரிகிறது.

ரியோ விளக்கம்

ரியோ விளக்கம்

எலுமிச்சை பழம் வரும் போதே, நிஷா அக்கா தனக்கு 4 லெமன் வேண்டுமென்று கர்ச்சீப் போட்டு வைத்து விட்டார். அந்த 4 லெமனை எடுத்ததில் என்ன பிரச்சனை என ரியோ அடடே விளக்கத்தை ஆரியிடம் சொல்லி, அந்த பஞ்சாயத்தை புரிய வைத்தார். சனம் ஷெட்டி லெமன் ஜூஸ் போட்டுக் கொடுத்து லெமன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து தீபாவளி கொண்டாட்டத்தை ஆரம்பித்தார். எல்லை மீறி போறீங்கடா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X