twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போராட்டத்தில் குதித்த எடிட்டர் லெனின் தமிழகத்தின் பிரபல திரைப்பட எடிட்டரும், மறைந்த இயக்குனர் பீம்சிங்கின் மகனுமான பி.லெனின் சென்னை திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் திடீர் மெளன விரதப் போராட்டத்தில் குதித்தார். தென்னிந்தியாவின் முன்னணி எடிட்டர்களில் லெனின் முதலிடத்தில் இருப்பவர். இவரும், எடிட்டர் வி.டி.விஜயனும் சேர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு எடிட்டர்களாக இணைந்து பணியாற்றியுள்ளனர். மேலும் தீவிர சமூக சிந்தனையாளரான லெனின் பல மாறுபட்ட திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய நாக் அவுட் குறும்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றவர். இந் நிலையில் நேற்று திரைப்பட வர்த்தக சபைக்கு வந்த லெனின் திடீரென மெளன விரதப் போராட்டத்தில் குதித்தார். எதற்காக இந்தப் போராட்டம் என்று கேட்டபோது, அவருடன் அமர்ந்திருந்த லெனினின் நண்பர் கூறியதாவது: குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கான மானியத் தொகையை பெறத் தகுதியாக, அந்தப் படம் குறைந்தபட்சம் 8 பிரதிகள் போடப்பட்டிருக்க வேண்டும் என தமிழக அரசு விதிமுறையை வைத்துள்ளது. இது தேவையில்லாத, நடைமுறையில் சாத்தியமில்லாத ஒரு விதிமுறை. இத்தனை பிரிண்ட் எடுக்க வசதி இருந்தால் அந்தத் தயாரிப்பாளருக்கு மானியமே தேவையில்லையே? எனவே ஒரு பிரிண்ட் எடுக்கப்பட்டிருந்தால் கூட அப்படத்திற்கு மானியத் தொகையை வழங்கக் கோரித்தான் இந்த உண்ணாவிரதப் போராட்டம் என்றார் லெனினின் நண்பர். லெனின் இயக்கியுள்ள றெக்கை என்ற படத்துக்கு சமீபத்தில் தமிழக அரசு விருது அறிவித்தது. ஆனால், அப்படம் ஒரு பிரிண்ட் மட்டுமே போடப்பட்டிருந்ததால், அரசின் மானிய உதவி கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்துதான் லெனின் போராட்டத்தில் குதித்தார். காலை முதல் சொட்டு நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதத்தில் அமர்ந்த லெனின் மாலை 6 மணியளவில் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். ஒரு நல்ல கலைஞனின் நியாயமான கோரிக்கை, ஜால்ரா சத்தங்களுக்கு இடையே, தமிழக அரசின் காதுகளில் விழுமா?

    By Staff
    |

    தமிழகத்தின் பிரபல திரைப்பட எடிட்டரும், மறைந்த இயக்குனர் பீம்சிங்கின் மகனுமான பி.லெனின் சென்னை திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் திடீர் மெளன விரதப் போராட்டத்தில் குதித்தார்.

    தென்னிந்தியாவின் முன்னணி எடிட்டர்களில் லெனின் முதலிடத்தில் இருப்பவர். இவரும், எடிட்டர் வி.டி.விஜயனும் சேர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு எடிட்டர்களாக இணைந்து பணியாற்றியுள்ளனர்.

    மேலும் தீவிர சமூக சிந்தனையாளரான லெனின் பல மாறுபட்ட திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

    இவர் இயக்கிய நாக் அவுட் குறும்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றவர்.

    இந் நிலையில் நேற்று திரைப்பட வர்த்தக சபைக்கு வந்த லெனின் திடீரென மெளன விரதப் போராட்டத்தில் குதித்தார்.

    எதற்காக இந்தப் போராட்டம் என்று கேட்டபோது, அவருடன் அமர்ந்திருந்த லெனினின் நண்பர் கூறியதாவது:

    குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கான மானியத் தொகையை பெறத் தகுதியாக, அந்தப் படம் குறைந்தபட்சம் 8 பிரதிகள் போடப்பட்டிருக்க வேண்டும் என தமிழக அரசு விதிமுறையை வைத்துள்ளது.

    இது தேவையில்லாத, நடைமுறையில் சாத்தியமில்லாத ஒரு விதிமுறை. இத்தனை பிரிண்ட் எடுக்க வசதி இருந்தால் அந்தத் தயாரிப்பாளருக்கு மானியமே தேவையில்லையே?

    எனவே ஒரு பிரிண்ட் எடுக்கப்பட்டிருந்தால் கூட அப்படத்திற்கு மானியத் தொகையை வழங்கக் கோரித்தான் இந்த உண்ணாவிரதப் போராட்டம் என்றார் லெனினின் நண்பர்.

    லெனின் இயக்கியுள்ள றெக்கை என்ற படத்துக்கு சமீபத்தில் தமிழக அரசு விருது அறிவித்தது. ஆனால், அப்படம் ஒரு பிரிண்ட் மட்டுமே போடப்பட்டிருந்ததால், அரசின் மானிய உதவி கிடைக்கவில்லை.

    இதனால் கோபமடைந்துதான் லெனின் போராட்டத்தில் குதித்தார். காலை முதல் சொட்டு நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதத்தில் அமர்ந்த லெனின் மாலை 6 மணியளவில் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

    ஒரு நல்ல கலைஞனின் நியாயமான கோரிக்கை, ஜால்ரா சத்தங்களுக்கு இடையே, தமிழக அரசின் காதுகளில் விழுமா?

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X