Leo: லியோ ஆடியோ லான்ச் கேன்சல்... எல்லாமே வேஸ்ட்... நஷ்டம் மட்டும் இத்தனை கோடி... ஆரம்பமே இப்படியா?
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 30ம் தேதி நடைபெறும் என சொல்லப்பட்டது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், தயாரிப்பாளர் லலித் குமாருக்கு பல கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்துள்ளதாம்.
லியோ ஆடியா லான்ச் கேன்சலால் பல கோடி நஷ்டம். விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. விஜய்யும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி வசூலிக்கும் என கணிக்கப்படுகிறது. இதனால், லியோவுக்கு உலகம் முழுவதும் பெரிய அளவில் ப்ரொமோஷன் செய்யப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி, வரும் 30ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறும் என சொல்லப்பட்டது. இதற்காக நேரு ஸ்டேடியத்தில் ஸ்டேஜ் அமைப்பது உட்பட பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன.

இந்த நிலையில் தான், லியோ இசை வெளியீட்டு விழா கேன்சல் செய்யப்படுவதாக படக்குழு அறிவித்தது. ரசிகர்களிடம் இருந்து அதிகளவில் என்ட்ரி பாஸ் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடிகள் என்பதற்காகவும், இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக படக்குழு அறிவித்தது. அதேநேரம் இதற்கு அரசியல் அழுத்தம் போன்ற வேறு எந்த காரணங்களும் இல்லை என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது, விஜய் ரசிகர்களிடம் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு அரசியல் அழுத்தம் தான் காரணம் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக லியோ இசை வெளியீட்டு விழாவில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மட்டும் கலந்துகொள்ள இருப்பதாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால் தயாரிப்பாளருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் என சொல்லப்படுகிறது.
அதன்படி, 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்துள்ளதாம். ரிலீஸுக்கு முன்பே லியோ படத்துக்கு 10 கோடி ரூபாய் நஷ்டம் என்பது, படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல், லியோ இசை வெளியீட்டு விழாவை ஏற்கனவே திட்டமிட்டபடி மலேசியாவில் நடத்தியிருக்கலாம் என புலம்பி வருகின்றனராம்.


Click it and Unblock the Notifications











