Leo 2: “LCU-ன்னு சொன்னதும் விஜய் ரியாக்‌ஷன்... லியோ 2-ல் இருக்கும் சர்ப்ரைஸ்..” லோகேஷ் ஓபன்!

சென்னை: விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது.

லோகேஷ் - விஜய் கூட்டணியின் முதல் LCU படமாக வெளியான லியோ கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

 Leo 2: Lokesh Kanagaraj update on Vijays Leo 2nd part

இந்தப் படம் LCU ஜானரில் உருவானது குறித்தும், விஜய் அதற்கு ஓக்கே சொன்னது பற்றியும் லோகேஷ் மனம் திறந்துள்ளார்.

மேலும், லியோ 2ம் பாகம் பற்றியும் லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.

லியோ 2 அப்டேட் கொடுத்த லோகேஷ்
விஜய் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லியோ திரைப்படம், இம்மாதம் 19ம் தேதி ரிலீஸானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியான லியோ, LCUன் கீழ் உருவாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால், முதல் நாளில் தரமான ஓபனிங் கிடைத்த லியோ, பாக்ஸ் ஆபிஸில் 148 கோடி ரூபாய் வசூலித்தது. இதுவரை ஒட்டுமொத்தமாக 500 கோடி வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதேநேரம், லியோ படத்தின் கதை, திரைக்கதை, மேக்கிங் குறித்து நெகட்டிவான விமர்சனங்களும் அதிகளவில் வந்தன. குறிப்பாக லியோவில் LCU சரியாக ஒர்க்அவுட் ஆகவில்லை என்றும், விஜய்யின் கேரக்டர் ஸ்கெட்சிங் லோகேஷின் டச்சில் இல்லை எனவும் சொல்லப்பட்டன. இந்நிலையில், லியோ இரண்டாம் பாதி குறித்து எழுந்த மோசனமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதாக லோகேஷும் தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக லியோ படம் பற்றி லோகேஷ் இன்னும் மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது லியோ படத்தின் கதையை 5 வருடங்களுக்கு முன்பே எழுதிவிட்டதாகவும், அதன்பின்னர் தான் கைதி, விக்ரம் படங்கள் LCU-ன் கீழ் இணைந்ததாகவும் கூறியுள்ளார். இதனால், லியோ உருவாகும் போது LCU ஐடியா பற்றி விஜய்யிடம் பேசினாராம் லோகேஷ். அதற்கு விஜய் எந்த தயக்கமும் இல்லாமல் ஓக்கே சொன்னதாகவும், இருப்பினும் LCU-ஐ பெரிதாக கொண்டு வராமல், விஜய்யின் பார்த்திபன் கேரக்டரை மட்டுமே வைத்து இந்த கதையை எழுதியதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல், லியோவில் ஃபிளாஷ்பேக் காட்சிகளை மன்சூர் அலிகான் தான் கூறியுள்ளார். அது விஜய்யின் சைடில் இருந்து சொல்லும் போது வேறுமாதிரியாக இருக்கும். அதனை லியோ 2வில் பார்க்கலாம் எனவும், விஜய் அனாதை இல்லத்தில் வளர்ந்ததாக சொல்லப்பட்ட கதையில், விக்ரம் படத்தின் ஃபஹத் கேரக்டர் ரெஃபரன்ஸ் இருப்பதாகவும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதனால், இப்போது லியோ 2ம் பாகம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

PHOTOS: பிக் பாஸ் வீட்டுக்குள் ஐஷு - நிக்சன் ரொமான்ஸ்! எக்ஸ் தளத்தில் ட்ரெண்டிங்.. என்னாச்சு தெரியுமா?

கைதி 2, விக்ரம் 2 இரண்டு படங்களும் வெளியான பின்னர் லியோ 2ம் பாகம் உருவாகும் எனவும் லோகேஷ் கூறியுள்ளார். அதேபோல், லியோ 2ம் பாகம், விக்ரம் 2 உடன் கனெக்ட் ஆகும் என்பதையும் ஓபனாக தெரிவித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் LCU படங்களில் ஜார்ஜ் மாரியானின் நெப்போலியன் கேரக்டர் கண்டிப்பாக இருக்கும் என்பதையும் ஓபனாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X