Leo: “லியோவுக்கு டஃப் கொடுக்கும் ஹெரால்டு தாஸ்..” டெரர் லுக்கில் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! ரியல் கோஸ்ட்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்துள்ளார்.
ஹெரால்ட் தாஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ள அர்ஜுன், லியோவில் செம்ம மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அர்ஜுனின் ஹெரால்ட் தாஸ் கேரக்டருக்கான கிளிம்ப்ஸ் வெளியாகி மாஸ் காட்டியிருந்தது.
இந்நிலையில், வெறித்தனமான லுக்கில் அர்ஜுன் மிரட்டலாக சம்பவம் செய்த போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

லியோவுக்கு டஃப் கொடுக்கும் ஹெரால்ட் தாஸ்
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் அடுத்த வாரம் 19ம் தேதி ரிலீஸாகிறது. பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகும் லியோ, பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கம் போல லியோ படத்தையும் ஆக்ஷன் ஜானரில் இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், விஜய்யுடன் பல முன்னணி நடிகர்களை நடிக்க வைத்துள்ளார். அதன்படி, த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த் கெளதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் என பலர் லியோவில் நடித்துள்ளனர். இவர்களில் அர்ஜுன், சஞ்சய் தத் இருவரும் மெயின் வில்லன்களாக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
சஞ்சய் தத் ஆண்டனி தாஸ் என்ற கேரக்டரிலும், அர்ஜுன் ஹெரால்ட் தாஸ் கேரக்டரிலும் நடித்துள்ளனர். அதேபோல் விஜய்யின் கேரக்டர் லியோ தாஸ் என இருப்பதால், இவர்கள் மூவருமே அண்ணன், தம்பிகளாக இருக்கும் எனவும் தெரிகிறது. சஞ்சய் தத், அர்ஜுன் இருவரது கிளிம்ப்ஸ் வீடியோவும் அவர்களது பிறந்தநாளில் வெளியாகியிருந்தன. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ஆண்டனி தாஸ், ஹெரால்ட் தாஸ் இருவருமே பவர்ஃபுல்லாக மாஸ் காட்டியிருப்பார்கள் என எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், இந்த எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் செம்ம மாஸ்ஸான போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. ஹெரால்ட் தாஸ் போஸ்டரான இதில், ரெட்ரோ ஸ்டைலில் இருக்கும் அர்ஜுனின் டெரர் லுக் மாஸ் காட்டியுள்ளது. பிரிண்டட் ஷார்ட், கையில் சிகரெட் என வெறித்தனமான லுக்கில் கெத்து காட்டுகிறார் அர்ஜுன். ஆக்ஷன் கிங்கின் இந்த போஸ்டர், விஜய் ரசிகர்களையே மெர்சலாக்கியுள்ளது.

லியோவில் விஜய் கேரக்டரை விடவும், அர்ஜுனின் ஹெரால்ட் தாஸ் தான் ரியல் கோஸ்ட் மோடில் இருக்கும் என கூறி வருகின்றனர். ஹீரோவாக மட்டுமே நடித்துள்ள அர்ஜுன், அஜித்தின் மங்காத்தா படத்தில் வில்லனாக என்ட்ரியானார். அதன்பின்னர் அர்ஜுன் கேரியரில் தரமான வில்லன் கேரக்டராக ஹெரால்ட் தாஸ் இருக்கும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











