LEO: லியோவில் தனுஷ்..? விஜய்க்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது... சுத்த கம்பி கட்டுற கதையா இருக்கே!

சென்னை: கோலிவுட் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படம் லியோ.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.

விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் நடித்து வரும் நிலையில், தனுஷும் இதில் கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்பட்டது.

 LEO: Actor Dhanush denied acting in Vijays Leo film

ஆனால், இந்த தகவல்கள் குறித்து தனுஷ் தரப்பில் இருந்தும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் லியோவில் தனுஷ்?
வாரிசு படத்தின் வெற்றி கொடுத்த நம்பிக்கையோடு, அடுத்து லியோவில் அதிரடி பாய்ச்சல் நடத்தி வருகிறார் விஜய். மாஸ்டர் படத்திற்குப் பின்னர் விஜய் - லோகேஷ் இணைந்துள்ள லியோ, LCU கான்செப்ட்டில் உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க ஒரு மெகா பட்டாளத்தையே இறக்கியுள்ளார் லோகேஷ்.

 LEO: Actor Dhanush denied acting in Vijays Leo film

அதன்படி, சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், மிஷ்கின் கெளதம் வாசுதேவ், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த வரிசையில் இன்னொரு டாப் ஹீரோவும் இந்தப் படத்தில் நடிக்கலாம் என சொல்லப்பட்டது. அது தனுஷ் தான் என்றும், விரைவில் விஜய்யுடன் அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேமியோ கேரக்டரில் நடித்த சூர்யா போல, லியோவில் தனுஷ் மிரட்டுவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், இதுகுறித்து தனுஷ் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள விளக்கம், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி, விஜய்யின் லியோவில் தனுஷ் நடிக்கவில்லை என்றும், யாரோ திட்டமிட்டு இந்த வதந்தியை பரப்பி வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

கோலிவுட்டின் டாப் 10 நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் தனுஷ். அவரது படங்களுக்கு நல்ல ஓபனிங் கிடைத்து வரும் நிலையில், லியோவில் எதற்கு கேமியோ ரோல் செய்ய வேண்டும் என்றுள்ளாராம். அதுமட்டும் இல்லாமல் விஜய், லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் தனுஷ் நெருங்கி பழகும் அளவிற்கு நண்பரும் கிடையாது. அதனால் லியோவில் தான் நடிப்பதாக வரும் செய்திகள் தேவையில்லாத பப்ளிசிட்டி என கூறியுள்ளாராம்.

லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜும் லியோவில் தனுஷ் நடிப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். ஆதாரம் இல்லாமல் இப்படியொரு கதையை சொல்லி ரசிகர்களை ஏமாற்றுவது தேவையில்லாத செயல் என கூறியுள்ளார். தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X