Vaiyapuri Leo: லியோவோட ரியல் வில்லனே நான் தான்னு சொன்னாங்க.. வையாபுரி சொன்ன சூப்பர் மேட்டர்!

சென்னை: நடிகர் விஜய்யுடன் பல படங்களில் இணைந்து நடித்து வந்த நகைச்சுவை நடிகர் வையாபுரி லியோ படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்த நிலையில், படம் வெளியான பின்னர் அவர் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.

Leo Actor Vaiyapuri reveals how he feels for the Vikram movied edited meme in recent interview

55 வயதாகும் வையாபுரி நூற்றுக்கணக்கான தமிழ் படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ள நிலையில், அவரை லியோவில் வில்லன் சஞ்சய் தத் கேங்கில் லோகேஷ் கனகராஜ் நடிக்க வைத்தே பெரிய சம்பவம் பண்ணி உள்ளார்.

லியோ தாஸ் குடும்ப சண்டைக்கு காரணமே நான் தான் என்றும் ரியல் வில்லனே வையாபுரி தான் என பறந்த மீம்களை பார்த்து மெய் சிலிர்த்து விட்டேன் என்றேன்.

மீம்களில் வந்துட்டேன்: படத்தில் நடித்து முடிக்கும் போதெல்லாம் எனக்கு என் கதாபாத்திரம் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. அதே போல படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது கூட எந்தவொரு ஃபீலிங்கும் இல்லை. சோஷியல் மீடியாவில் என்னை வைத்து மீம் வர ஆரம்பித்ததை பார்த்த பின்னர் தான் எனக்கு எவ்ளோ பெரிய ரோலை லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளார் என நினைத்து சிலிர்த்து விட்டேன் என்றார்.

வடிவேலு, விவேக்கை வைத்து எல்லாம் ஏகப்பட்ட மீம்கள் வெளியாகி உள்ள நிலையில், தன்னை வைத்து இதுவரை ஒரு மீம் கூட வந்ததில்லை என்றும் முதல் முறையாக இப்படியொரு வீடியோ மீமே வந்ததை பார்த்த நிலையில், சந்தோஷப்பட்டேன் என வையாபுரி கூறியுள்ளார்.

குடும்ப சண்டைக்கே நான் தான் காரணம்: லியோ தாஸ் அவரோட அப்பா ஆண்டனி தாஸ் மற்றும் சித்தப்பா ஹரோல்ட் தாஸ், தங்கச்சி எலிசாவுடன் சந்தோஷமாக இருந்து கொண்டு நண்பர்களையும் போலீஸ் அதிகாரிகளையும் சுட்டு சுட்டு விளையாடிக் கொண்டிருந்த நிலையில், லியோ தாஸ் மற்றும் எலிசாவின் ஜாதகத்தை எடுத்துக் கொடுத்து பலி கொடுக்க சொல்லி குடும்பத்துக்குள் சண்டையை விளைவித்ததே நான் தான் என்றும் கூறியுள்ளார்.

Leo Actor Vaiyapuri reveals how he feels for the Vikram movied edited meme in recent interview

நாயகன் மீண்டும் வரார்: விக்ரம் படத்தின் நாயகன் மீண்டும் வரார் வீடியோ மீமில் கமலுக்கு பதிலாக என்னை வைத்து இவர் தான் லியோ படத்தின் மெயின் வில்லனே என வெளியான வீடியோ மீம் பார்த்து ஹேப்பி ஆகி விட்டேன் என வையாபுரி கூறியுள்ளார்.

கிளைமேக்ஸில் அப்படியொரு சீன்: அர்ஜுனை எல்லாம் விஜய் கொன்று விட்ட பின்னர், ஒட்டுமொத்த குடும்ப சண்டைக்கும் நீ தான் காரணம் என என்னையும் கொல்வது போன்ற ஒரு சீன் இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், அதை வைக்கவில்லை என்றும் வையாபுரி தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X