Leo: லியோவுக்கு தொடரும் சிக்கல்... அவசரமாக ப்ரைவேட் ஜெட்டில் பறந்த விஜய்... ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் நாளை முதல் வெளியாகிறது.

இதனையடுத்து விஜய் ரசிகர்கள் லியோ படத்திற்கான டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றனர்.

லியோ படத்திற்கு முதல் நாளில் அதிகாலை 4 மணி, காலை 7 மணி காட்சிகளுக்கு தமிழ்நாட்டில் அனுமதி கிடைக்கவில்லை.

இந்நிலையில், நடிகர் விஜய் அவசரமாக ப்ரைவேட் ஜெட்டில் வெளியூர் பறந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 Leo: Actor Vijay suddenly goes abroad in a Private Jet

அவசரமாக வெளியூர் பறந்த விஜய்
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கிய லியோ, நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமான லியோவுக்கு இந்தியா முழுவதும் பயங்கரமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத் மூவரும் இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், லியோ படத்தின் அதிகாலை 4 மணி FDFS காட்சிக்கு தமிழ்நாட்டில் மட்டும் அனுமதி கிடைக்கவில்லை. பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளது. முன்னதாக வாரிசு, துணிவு படங்கள் வெளியான போது ரோகிணி தியேட்டர் முன்பு ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்குப் பின்னர் இனி எந்த படங்களுக்கும் அதிகாலை 4 FDFS-க்கு அனுமதி கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

 Leo: Actor Vijay suddenly goes abroad in a Private Jet

அதுமட்டும் இல்லாமல் லியோ ட்ரெய்லர் வெளியான போது, ரோகிணி தியேட்டரை ரசிகர்கள் சூறையாடிய சம்பவமும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானது. இதனால் தான் லியோ FDFS அனுமதி கொடுக்கப்படவில்லை. அதேபோல், 7 மணி காட்சிக்கும் பெர்மிஷன் கிடையாது என அதிரடியாக அறிவிப்பு வெளியானது. ஆடியோ லான்ச், ட்ரெய்லர் ரிலீஸ் முதல் தற்போது FDFS வரை லியோ படத்திற்கு தொடர்ந்து சிக்கல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

 Leo: Actor Vijay suddenly goes abroad in a Private Jet

இந்நிலையில், விஜய் தற்போது அவசரமாக வெளியூர் சென்றுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. லியோ படத்திற்கு தொடர்ந்து பிரச்சினைகள் வந்துகொண்டே இருப்பதால், விஜய் வெளியூர் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. ப்ரைவேட் ஜெட்டில் இருந்து இறங்கும் விஜய், அங்கிருந்து காரில் ஏறிச் செல்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X