Leo: லியோவில் இணைந்த விக்ரம் பட பிரபலம்... இனி கமல் மட்டும் தான் மிச்சம் இருக்காரு அதானே?
சென்னை: லியோ படம் மூலம் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி.
லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஏராளமான நடிகர் நடித்து வருகின்றனர்.
அவர்களுடன் தற்போது நடிகை மாயா கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.
விக்ரம் படத்தில் கால் கேர்ள் கேரக்டரில் நடித்த மாயா கிருஷ்ணன், லியோவில் விஜய்யுடன் நடிக்கவுள்ளார்.

இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் டைட்டில் டீசரில் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, லியோ திரைப்படம் ஆயுத பூஜை ஸ்பெஷலாக அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகிறது. காஷ்மீரில் தொடங்கிய லியோ படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகை மாயா கிருஷ்ணன் இணைந்துள்ளார். லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தில் கால் கேர்ள் கேரக்டரில் நடித்திருந்தார் மாயா கிருஷ்ணன். இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது லியோவிலும் அவர் நடிக்கவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் நெட்டிசன்கள் பலர் லோகேஷ் கனகராஜ்ஜை ட்ரோல் செய்து வருகின்றனர்.
விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் இனி தனது படங்கள் LUC, அதாவது தனக்கான தனி யுனிவர்ஸ் கான்செப்ட்டில் இருக்கும் எனக் கூறியிருந்தார். விக்ரம் படத்தில் கைதியில் நடித்த நரேனும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல் விக்ரம் க்ளைமேக்ஸில் கைதி கார்த்தியின் குரலும் இடம்பெறும். இதனால், லியோவும் லோகேஷின் யுனிவர்ஸ் படமாக உருவாகி வருவது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

அதற்காக விக்ரம் படத்தில் நடித்த பலரையும் லியோவில் புக் செய்துள்ளார் லோகேஷ். அதன்படி நரேன், ஏஜெண்ட் டினா, கைதி படத்தில் நடித்த ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலரும் லியோவில் நடித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் விஜய், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் என மிகப் பெரிய ஸ்டார் காஸ்ட்டிங் உடன் உருவாகி வருகிறது.
இன்னொரு பக்கம் லியோ படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் ஆகியோரும் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்போது மாயா கிருஷ்ணனும் இணைந்துள்ளது நெட்டிசன்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இப்படியே போனால் இனி விக்ரம் படத்தில் நடித்த கமல் மட்டும் தான் மிச்சம் இருக்கிறார். அவரையும் லியோவில் விஜய்யுடன் நடிக்க வைத்துவிட்டால் நல்லா இருக்குமே என கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











