Leo: லியோ அட்வான்ஸ் புக்கிங் ஓபன்..? விஜய் ரசிகர்களே எதிர்பார்க்காத அதிரிபுதிரி சர்ப்ரைஸ்!
சென்னை: விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ, இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே விரைவில் லியோ இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு தீவிரமாகி வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் குறித்து எக்ஸ்க்ளூஸிவ் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

லியோ அட்வான்ஸ் புக்கிங் ஓபன்..? மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்ஜுடன் இரண்டாவது முறையாக லியோவில் இணைந்தார் விஜய். லோகேஷ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. அதனால், உடனடியாக விஜய்யின் லியோ படப்பிடிப்பைத் தொடங்கிய லோகேஷ், 125 நாட்களில் மொத்த படத்தையும் முடித்துவிட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார்.
விஜய் கேரியரில் இதுவரை இல்லாத அளவிற்கு அவர் நடித்துள்ள லியோ படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படம் லோகேஷின் யுனிவர்ஸில் உருவாகியுள்ளதாகவும், இது விக்ரமின் ப்ரீக்வெல் வெர்ஷனாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
மேலும், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வரும் என லோகேஷ் கனகராஜ்ஜும் லீட் கொடுத்துள்ளார். அதனால், லியோ படத்துக்கு பெரும் ஹைப் கிடைத்துள்ளதோடு, ப்ரீ தியேட்டர் பிஸினஸ் மூலம் 500 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளதால் அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் இசை வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே லியோ படத்தின் அட்வான்ஸ் புக்கிங் எப்போது ஓபனாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றாலும், பெரும்பாலும் ஒரு வாரத்துக்கு முன்புதான் டிக்கெட் புக்கிங் தொடங்கும். ஆனால், லியோ படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் ரிசர்வேஷன், 6 வாரங்களுக்கு முன்பே தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது செப்டம்பர் 7ம் தேதியே லியோ அட்வான்ஸ் புக்கிங் தொடங்கவுள்ளதாம்.
ஆனால், லண்டனில் மட்டும் தான் செப்டம்பர் 7ம் தேதி லியோ புக்கிங் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட இந்தியாவில் லியோ ரிசர்வேஷன் குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லையாம். லண்டனில் லியோ அட்வான்ஸ் புக்கிங் தொடங்கும் செப்டம்பர் 7ம் தேதி தான், ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் லண்டனில் இருக்கும் விஜய், ஷாருக்கான் ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











