Leo:அமெரிக்காவில் லியோ ஸ்க்ரீனை கிழித்த மர்ம நபர்... ரசிகர்கள் அதிர்ச்சி... ட்ரெண்டாகும் வீடியோ!

கலிபோர்னியா: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த வாரம் முதல் உலகெங்கும் வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

 Leo: An angry person tore the screen of Vijays Leo in the USA

இந்நிலையில், அமெரிக்காவில் லியோ திரையிடப்பட்ட ஸ்க்ரீன் கிழிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மர்ம நபர் ஒருவர் படம் ஓடிக்கொண்டிருக்கும் பேதே திரையை கிழித்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

லியோ ஸ்க்ரீன் கிழிப்பு

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் லியோ. மாஸ்டரை விடவும் லியோவுக்கு ரொம்பவே எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதன்படி முதல் நாளில் தரமான ஓபனிங் உடன் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய லியோ, அடுத்தடுத்த நாட்களில் கொஞ்சம் தடுமாறி வருகிறது. ஆனாலும், பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி ரூபாய் வர வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் - லோகேஷ் கூட்டணியின் முதல் LCU படமாக லியோ உருவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால், கைதி, விக்ரம் வரிசையில் லியோவும் LCU ஜானரில் இணைந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் லியோ திரையிடப்பட்ட ஸ்க்ரீன் கிழிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது லியோவின் அமெரிக்க தியேட்டர் ரைட்ஸ் உரிமையை பார்ஸ் என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படம் வெளியாகும் முன்பே லியோவுக்கு மிகப் பெரிய அளவில் ப்ரொமோஷன் செய்திருந்தது பார்ஸ் நிறுவனம். இதனால், அமெரிக்காவில் மட்டும் முதல் நாளிலேயே 20 கோடி ரூபாய் வரை வசூலித்தது லியோ. ஆனால், பார்ஸ் நிறுவனத்துக்கு லோக்கல் விநியோகஸ்தருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த லோக்கல் விநியோகஸ்தகர் லியோ திரையிடப்பட்ட ஸ்க்ரீனை கிழித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே ஸ்க்ரீன் கிழிக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் இந்த வீடியோவும் டிவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொடர் விடுமுறைக்குப் பின்னர் பெரிய அளவில் வரவேற்பு இல்லாமல் தடுமாறி வருகிறது லியோ.

இந்நிலையில், அமெரிக்காவில் லியோ ஸ்க்ரீன் கிழிக்கப்பட்டது படத்திற்கு இன்னும் நெகட்டிவாக அமைந்துள்ளது. லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது முதல், ஆடியோ லான்ச், ட்ரெய்லர் ரிலீஸ், லியோ FDFS என அடுத்தடுத்து பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து இப்போது அமெரிக்காவிலும் லியோ சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X