Trisha: சென்னை சேப்பாக்கத்தில் எந்திரிச்சு நின்ன குந்தவை.. லியோ த்ரிஷாவை பார்த்து குஷியான ஃபேன்ஸ்!

சென்னை: லியோன்னாலும் சிங்கம் சென்னை சூப்பர் கிங்ஸும் சிங்கம் எப்படி கனெக்ட் ஆகுதுன்னு பாருங்க என ரசிகர்கள் நடிகை த்ரிஷா சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை கண்டு ரசிக்கும் போட்டோக்களை ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கத்தில் கடந்த முறை சென்னை அணி விளையாடிய போது சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கண்டு ரசித்தனர்.

Leo and Ponniyin Selvan star Trisha watches CSK vs RR match at Chepauk stadium

இந்நிலையில், இன்றைய போட்டியை பொன்னியின் செல்வன் குந்தவை பிராட்டியாரே நேரில் வந்து கண்டு ரசித்துள்ளது ரசிகர்களை குதூகலப்படுத்தி உள்ளது.

சேப்பாக்கத்தில் ஐபிஎல் பார்க்கும் த்ரிஷா: ஐபிஎல் திருவிழா ஆரம்பமாகி அமர்க்களமாக சென்று கொண்டிருக்கிறது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே டி20 போட்டி நடைபெற்று வரும் நிலையில், நடிகை த்ரிஷா அந்த போட்டியை நேரில் கண்டு ரசித்துள்ளார்.

நடிகை த்ரிஷா சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டியை ரசித்துப் பார்க்கும் புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து த்ரிஷாவின் ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

லியோ ஹீரோயின்னா சும்மாவா: லியோ என்றாலும் சிங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சிங்கம் அதான் லியோ படத்தின் ஹீரோயின் த்ரிஷா இன்றைய போட்டியை பார்க்க நேரிலேயே வந்து விட்டார் என விஜய் ரசிகர்கள் நடிகை த்ரிஷாவின் போட்டோக்களை அதிக அளவில் ஷேர் செய்து தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Leo and Ponniyin Selvan star Trisha watches CSK vs RR match at Chepauk stadium

எந்திரிச்சு நின்ன குந்தவை: சேப்பாக்கம் மைனாதத்தில் சென்னை அணி விளையாடும் ஆட்டத்தை பார்க்க பொன்னியின் செல்வன் குந்தவை எப்படி எந்திரிச்சு நிக்கிறாரு பாருங்க என பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரசிகர்களும் த்ரிஷாவின் புகைப்படங்களை தீயாக ஷேர் செய்து வருகின்றனர்.

அடுத்தடுத்து பெரிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை இடத்தை மீண்டும் பிடித்து விட்டார் த்ரிஷா. சமீபத்தில், விஜய்யுடன் லியோ படத்தில் த்ரிஷா ரொமான்ஸ் செய்யும் ஒரு புகைப்படமும் வெளியாகி வேறலெவலில் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது. த்ரிஷாவின் அழகை பார்த்து சோ ஸ்வீட் தலைவி என த்ரிஷாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X