Leo: “Block - O - Blockbuster.." அனிருத்தின் லியோ விமர்சனம்... விக்ரம் ஸ்டைலில் செம்ம போஸ்!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.
விஜய் - லோகேஷ் - அனிருத் கூட்டணியில் லியோவும் ஹிட் அடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து சென்னை உட்பட அனைத்து ஏரியாக்களிலும் லியோ டிக்கெட் புக்கிங் தாறுமாறாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், லியோ படம் பார்த்த அனிருத், லோகேஷ் கனகராஜ்ஜுக்கு ஸ்மார்ட்டாக ஒன்லைனில் விமர்சனம் கூறியுள்ளார்.

அனிருத்தின் லியோ விமர்சனம்
உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் லியோ. மாஸ்டரை தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் - அனிருத் கூட்டணி லியோவிலும் இணைந்துள்ளது. அதேநேரம் லியோ மாஸ்டர் படத்தை விடவும் தரமான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனையடுத்து லியோ ரிலீஸாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், டிக்கெட் புக்கிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய், லோகேஷ் இருவருக்கும் ஃபேவரைட்டான அனிருத், லியோவுக்கு இசையமைத்துள்ளதால், ரசிகர்களும் செம்ம வைப்பில் உள்ளனர். கத்தி திரைப்படம் மூலம் விஜய்க்கு சூப்பர் ஹிட் சம்பவங்களை செய்து வருகிறார் அனிருத். அதேபோல், சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்துக்கும் அனிருத்தின் பிஜிஎம் தான் செம்ம ஹைப் கொடுத்தது. இதனை ஜெயிலர் சக்சஸ் மீட்டில் ரஜினியே கூறியிருந்தார்.
இந்நிலையில், லியோ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்ததும், பின்னணி இசையமைப்பதில் அனிருத் பிஸியாக இருந்தார். மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ள லியோவில் இருந்து, இதுவரை 3 பாடல்கள் வெளியாகிவிட்டன. பாடல்களைப் போலவே தீம் மியூசிக் உட்பட பின்னணி இசையையும் விஜய்க்காகவே ஸ்பெஷலாக கொடுத்துள்ளாராம் அனிருத். இதனால் லியோ படத்தை தியேட்டரில் பார்க்கும் ரசிகர்களுக்கு சூப்பரான சர்ப்ரைஸ் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் லியோ பிஜிஎம் வேலைகள் முடிந்ததும் படத்தின் ஃபைனல் வெர்ஷனை பார்த்துள்ளார் அனிருத். இதுதான் தியேட்டரில் ரசிகர்களுக்கான ஃபைனல் காப்பி என சொல்லப்படுகிறது. லியோ படத்தை முழுவதுமாக பார்த்து முடித்த அனிருத், உடனடியாக லோகேஷ் கனகராஜ்ஜுக்கு மெசேஜ் செய்துள்ளார். அதில் "லியோ Block - O - Blockbuster" என உற்சாகமாக விமர்சனம் கொடுத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் விக்ரம் படத்தின் பிஜிஎம் வேலை முடிந்ததும் அனிருத்தும் லோகேஷும் வெற்றி நிச்சயம் என போஸ் கொடுத்திருந்தனர்.
தற்போது அதேபோல், விஜய் போஸ்டர் பின்னணியில் அனிருத்தும் லோகேஷும் ஸ்டைலாக போஸ் கொடுத்து மாஸ் காட்டியுள்ளனர். முன்னதாக லியோ படத்தை பார்த்த தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ்ஜை கட்டிப்பிடித்து நன்றி எனக் கூறியதாக செய்திகள் வெளியாகின. ஹீரோவை தொடர்ந்து ராக்ஸ்டார் அனிருத்தும் லியோவுக்கு நல்ல ரிசல்ட் கொடுத்துள்ளதால், தயாரிப்பாளர் லலித் குமாரும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனுக்கு ரெடியாகிவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











