Leo: லியோவில் இருந்து அடுத்த க்ளிம்ப்ஸ் இவருக்கு தான்... தரமாக சம்பவம் செய்யப்போகும் லோகேஷ்!

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன்னர் சஞசய் தத்தின் பிறந்தநாளில் அவரது ஆண்டனி தாஸ் கேரக்டருக்கான க்ளிம்ப்ஸ் வெளியானது.

அதேபோல், அடுத்து அர்ஜுனின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட லோகேஷ் முடிவெடுத்துள்ளாராம்.

 Leo: Arjun Glimpse video will expect on August 15 from Leo film

விரைவில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் க்ளிம்ப்ஸ்: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் லியோ. 7 ஸ்க்ரீன்ஸ் லலித் குமார் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம், அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

லியோ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டதால், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார் லோகேஷ். இதனிடையே இப்படத்தின் முதல் அப்டேட்டாக டைட்டில் டீசர் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து விஜய் பிறந்தநாளில் ஃபர்ஸ்ட் சிங்கிளான, 'நான் ரெடி' பாடல் வெளியானது. இதனையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளான ஜூலை 29ம் தேதி அவரது கேரக்டர் க்ளிம்ப்ஸ் வெளியானது.

அதன்படி ஆண்டனி தாஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ள சஞ்சய் தத் க்ளிம்ப்ஸ், செம்ம மிரட்டலாக வெளியானது. முறுக்கிய மீசையுடன் டெரர் லுக்கில் காணப்படும் சஞ்சய் தத், வாயில் சிகரெட்டுடன் திரும்பி சலாம் போடுவதாக இந்த வீடியோ உருவாகியிருந்தது. இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடம் லியோ படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்து ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகவுள்ளதாம்.

ஆகஸ்ட் 15ம் தேதி அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால், அன்று அவரது கேரக்டரை அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். அர்ஜுனின் க்ளிம்ப்ஸ் வீடியோவுடன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல லோகேஷ் & டீம் காத்திருக்கிறதாம். இந்த வீடியோவில் அர்ஜுனின் கேரக்டர் செம்ம மாஸ்ஸாக இருக்கும் என லியோ தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.

சஞ்சய் தத், அர்ஜுனைத் தொடர்ந்து அடுத்து யாருடைய க்ளிம்ப்ஸ் வெளியாகும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல், செகண்ட் சிங்கிள், டீசர் குறித்த அப்டேட்டையும் லோகேஷ் கனகராஜ் விரைவில் வெளியிடுவார் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனிடையே லியோ படத்தில் நடித்துள்ளவர்களின் முழுமையான பட்டியல் எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X