Leo: மங்காத்தா அஜித் ஸ்டைலில் அர்ஜுன் கேரக்டர்... லியோவில் விஜய்க்கு செக் வைக்கும் ஆக்ஷன் கிங்!
சென்னை: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் 60 நாட்கள் வரை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் தொடங்கிய அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் அர்ஜுன் பங்கேற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், லியோ படத்தில் அர்ஜுனின் கேரக்டர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

லியோவில் அர்ஜுன் கேரக்டர் இதுதானா?:விஜய்யின் லியோ திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் திரைப்படமான லியோ முதற்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்றது. சென்னையில் இருந்து தனி விமானத்தில் காஷ்மீர் பறந்த லியோ டீம், கடந்த இரு மாதங்களாக அங்கேயே முகாமிட்டு படப்பிடிப்பில் பங்கேற்றனர்.
அதன்பின்னர் சென்னை திரும்பிய படக்குழுவுக்கு கடந்த சில நாட்கள் படப்பிடிப்பில் இருந்து பிரேக் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் லியோ படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கியது. இதில், விஜய், த்ரிஷா, அர்ஜுன் ஆகியோரின் காட்சிகளை படமாக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளாராம். அதன்பின்னர் விஜய் - சஞ்சய்த் தத் காட்சிகளும் சென்னையில் படமாக்கப்படும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், லியோ படத்தில் அர்ஜுனின் கேரக்டர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, விஜய்க்கு நண்பராக நடிக்கும் அர்ஜுன், கடைசியில் அவருக்கு துரோகம் செய்துவிட்டு வில்லனாக மாறுவது போன்ற கேரக்டராம். கிட்டத்தட்ட மங்காத்தா படத்தின் அஜித் கேரக்டரைப் போல அர்ஜுனின் ரோல் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அர்ஜுனின் கேரக்டர் மீது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
மங்காத்தா படத்தில் அஜித் செம்மையான நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பார். போலீஸில் இருந்து டிஸ்மிஸ் ஆகும் அஜித், பின்னர் த்ரிஷாவின் அப்பா ஜெயப்பிரகாஷிடம் நட்பாக பழகி அவரை ஏமாற்றுவார். அதன்பின்னர் பணத்தை கொள்ளையடிக்க உதவிய அஷ்வின், வைபவ், மஹத், பிரேம்ஜி ஆகியோருக்கு துரோகம் செய்ய துப்பாக்கியுடன் காத்திருப்பார். ஆனால், க்ளைமேக்ஸில் அர்ஜுனின் பார்ட்னராக வந்து மாஸ் காட்டுவார்.

லியோ படத்தில் அர்ஜுனின் கேரக்டர் இதுபோன்று தான் ஸ்கெட்ச் செய்யப்பட்டுள்ளதாம். விஜய்யின் நம்பிக்கைக்குரிய நண்பராக வரும் அர்ஜுன், ஒருகட்டத்தில் அவருக்கு எதிராக வில்லத்தனம் செய்யவுள்ளாராம். அதேநேரம், லியோ படத்தில் கெளதம் மேனனும் விஜய்க்கு நண்பராக நடிப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதனால், கெளதம் மேனனும் விஜய்க்கு துரோகம் செய்துவிட்டு வில்லனாக மிரட்டுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சென்னையில் ஒரு ஷெட்யூலும் அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பை நடத்தவும் லோகேஷ் திட்டமிட்டுள்ளாராம். இதனால், இன்னும் இரு மாதங்களில் லியோ படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் ரஜினியின் தலைவர் 171 படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











