Leo Audio Launch - லியோ ஆடியோ வெளியீட்டு விழா எங்கு,எப்போது தெரியுமா?.. லேட்டஸ்ட் தகவல் இதோ
சென்னை: Leo Audio Launch (லியோ ஆடியோ வெளியீட்டு விழா) லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கப்போகும் இடம், தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. வாரிசுக்கு முன்னதாக வெளியான பீஸ்ட் படமும் தோல்வியடைந்தால் விஜய்யின் கிராஃபில் கடைசி இரண்டு படங்களில் ஒன்று தோல்வி, மற்றொன்று சுமார் என சேர்ந்திருக்கிறது. எனவே அடுத்த படத்தை ஹிட் படமாக கொடுக்க திட்டமிட்டிருக்கிறார். அதற்கேற்றபடி விஜய்யின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

லியோ ப்ளடி ஸ்வீட்: லியோ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், ப்ரியா ஆனந்த் என பெரும் நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. இதன் டைட்டில் டீசர் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்ற சூழலில் படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. அனிருத் இசையமைத்திருக்கிறார். காஷ்மீரில் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் நடந்தது.
சென்னையில் பரபர ஷூட்டிங்: காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னையில் ஷூட்டிங்கை தொடங்கியது படக்குழு. முதலில் சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடந்த ஷூட்டிங் அடுத்ததாக பையனூரில் நடந்தது. அங்கு விஜய்க்கும், சஞ்சய் தத்துக்கும் இடையேயான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதேபோல் இன்று முதல் லியோ ஷூட்டிங்கில் அர்ஜுன் இணையவிருப்பதாகவும், இன்று அர்ஜுன் - விஜய்க்கு இடையிலான ஸ்டண்ட் காட்சிகள் ஷூட் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.
பிரமாண்டமான பாடல்: மேலும் படத்தில் ஒரு பாடலுக்காக இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து மொத்தம் 2000 டான்ஸ்டர்கள் வரவழைக்கப்படவிருப்பதாகவும், அதற்கான ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகி ஆச்சரியப்படுத்தியது. அதேபோல், படத்தில் சிங்கத்திற்கு முக்கியமான ரோல் ஒன்று இருக்கிறது. எனவே அதனை உருவாக்க சிஜிக்கு மட்டும் 15 கோடி ரூபாய் செலவு செய்யவிருப்பதாகவும் பேச்சு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
ஆடியோ வெளியீட்டு விழா: இதற்கிடையே சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், "படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை இதுவரை சென்னையில்தானே வைத்துவருகிறோம். இந்த முறை தென் தமிழ்நாட்டில் இருக்கும் மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய ஏதேனும் ஒரு ஊரில் வைக்கலாம்" என விஜய் கூறியதாக தெரிவித்தார். இது விஜய் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

ஆடியோ வெளியீட்டு விழா எங்கு? எப்போது?: லலித்குமார் அவ்வாறு கூறியதை அடுத்து லியோ ஆடியோ வெளியீட்டு விழா எங்கு நடக்கப்போகிறது என ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இந்நிலையில் அதுகுறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாவதால், ஆடியோ ரிலீஸை மதுரையில் அக்டோபர் ஒன்றாம் தேதியோ இல்லை அக்டோபர் முதல் வாரத்திலோ வைத்துக்கொள்ள விஜய் ஓகே சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மதுரை ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











