Leo Audio Launch: கத்தி பல கத்தி குத்த காத்திருக்கு.. விஜய்க்கு வந்த சோதனை.. துணை நிற்கும் ரசிகர்கள்

சென்னை: லியோ படம் ஆரம்பத்தில் அலப்பறையுடன் தொடங்கிய செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் கடைசி நேரத்தில் ஏகப்பட்ட பிரஷர் காரணமாக எந்தவொரு புரமோஷனையும் பண்ண முடியாமல் பின் வாங்கி விட்டது.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை சிலருக்கு பிடிக்காத காரணத்தால் தான் இப்படியெல்லாம் நடக்கிறது என விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தாக இதுதான் காரணம் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Leo Audio Launch cancelled upsets fans and they trending #WeStandWithLEO

அதே சமயம் இந்த சோதனை காலக்கட்டத்தில் விஜய்க்கு பக்க பலமாக ரசிகர்கள் நாங்கள் இருப்போம் என #WeStandWithLEO ஹாஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ரத்தானது லியோ ஆடியோ லாஞ்ச்: பீஸ்ட் படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழாவை தயாரிப்பு நிறுவனம் நடத்தாதற்கு கொரோனாவை காரணம் காட்டினர். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால், தற்போது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தாகி உள்ளது ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

உடைந்து போன ரசிகர்கள்: ரஜினிகாந்தின் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா, ஜவான் இசை வெளியீட்டு விழா எல்லாம் சென்னையில் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் நடைபெற்று வரும் நிலையில், விஜய்யின் லியோ ஆடியோ வெளியீட்டு விழா மட்டும் ரத்தாக என்ன காரணம் என்றும் தயாரிப்பு நிறுவனத்தால் இப்படியொரு இசை வெளியீட்டு விழாவை கூட பாதுகாப்பாக நடத்த முடியாதா என விஜய் ரசிகர்கள் அந்த அறிவிப்பை கேட்டு உடைந்து போயுள்ளனர்.

துணை நிற்கும் தளபதி படை: நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த ஏற்பாடுகளே ஆரம்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், திடீரென இப்படியொரு அதிர்ச்சி அறிவிப்பு லியோ படக்குழுவிடம் இருந்து வந்துள்ள நிலையில், அந்த படத்திற்கான பெரிய புரமோஷனை தவிர்க்க வேண்டிய அளவுக்கு லியோ படக்குழுவுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை புரிந்து கொண்ட ரசிகர்கள் நடிகர் விஜய்க்கு எப்போதும் துணையாக இருப்போம் என #WeStandWithLEO ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X