Leo Audio Launch: லியோ ஆடியோ லான்ச் கேன்சலாக AR ரஹ்மான் காரணமா..? இது என்ன புது உருட்டு..?
சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
இதனையடுத்து லியோ இசை வெளியீட்டு விழா இந்த வாரம் நடைபெறும் என சொல்லப்பட்ட நிலையில், திடீரென கேன்சல் ஆனது.
இதற்கான காரணம் பற்றி பலவிதமான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இன்னொரு பக்கம் ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியும் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

லியோ ஆடியோ லான்ச் கேன்சலாக காரணம்: விஜய் நடித்துள்ள லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ஏற்கனவே இந்தக் கூட்டணியில் வெளியான மாஸ்டர், பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட்டானது. அதனால், லியோ திரைப்படம் மீதும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்யும் லோகேஷும் இணைந்து தரமான சம்பவம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா, இந்த வாரம் நடைபெறும் என சொல்லப்பட்டது. வரும் 30ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த லியோ இசை வெளியீட்டு விழா, திடீரென ரத்து செய்யப்பட்டது. அதிகளவில் டிக்கெட் பாஸ்கள் கேட்டு விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடிகள் நடந்துவிடக் கூடாது என ரத்து செய்ததாக படக்குழு தெரிவித்திருந்தது.
மேலும், இதற்கு எந்தவித அரசியல் அழுத்தங்களும் நெருக்கடிகளும் காரணமில்லை எனவும் லியோ படக்குழு கூறியிருந்தது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில், லியோ இசை வெளியீட்டு விழா ரத்தானதற்கான காரணம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. அதாவது லியோ ஆடியோ லான்ச் டிக்கெட்டுகள் போலியாக அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால், அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டதால் தான், லியோ இசை வெளியீட்டு விழா ரத்தானதாம். சமீபத்தில் நடந்து முடிந்த ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் அதிகளவில் ரசிகர்கள் கூடியதால் பெரும் ச்ர்ச்சையானது. குறிப்பிட்ட எண்ணிக்கையை விடவும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதால் தான் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி, மறக்கவே முடியாத சம்பவமாக மாறிவிட்டது.
இதேபோல் ஒரு நிலை லியோ இசை வெளியீட்டு விழாவிலும் நடைபெற்றுவிடக் கூடாது என படக்குழுவினர் உஷாராகிவிட்டார்களாம். ஆனாலும், லியோ இசை வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட்டுகளை போலியாக அச்சிட்டு விநியோகம் செய்தவர்கள் யார் என்பது மர்மமாகவே உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











