மலேசியாவும் போச்சா.. விஜய்யின் லியோ ஆடியோ லாஞ்ச் கடைசியில எங்க நடக்கப் போகுது தெரியுமா?

சென்னை: தளபதி விஜய்யின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக மலேசியாவில் நடைபெறும் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மலேசியாவில் ஆடியோ வெளியீட்டு விழா நடக்க வாய்ப்பே இல்லை என பகீர் தகவல்கள் கிளம்பி உள்ளன.

இந்த ஆண்டு நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால், அந்த படம் விமர்சன ரீதியாக படுதோல்வியை சந்தித்தது.

Leo audio launch not happened in Malaysia talks trending

அந்த இசை வெளியீட்டு விழாவில் ஆரம்பித்த சூப்பர்ஸ்டார் சர்ச்சை அதே இடத்தில் நடைபெற்ற ஜெயிலர் இசை வெளியீட்டு விழா வரை எதிரொலித்தது.

மலேசியாவில் லியோ இசை வெளியீடு இல்லை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், கவுதம் மேனன், அனுராக் காஷ்யப், மிஷ்கின், சாண்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.

மலேசியாவில் உள்ள Axiata Arena Bukit Jalil, KUALA LUMPUR உள்விளையாட்டு அரங்கில் வரும் அக்டோபர் 6ம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தகவல்கள் வெளியானது. ஆனால், தற்போது மலேசியாவில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற வாய்ப்புகளே கிடையாது என கூறுகின்றனர்.

அதே நேரு ஸ்டேடியத்தில் தான்: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடந்த நிலையில், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் சென்னை நேரு ஸ்டேடியத்திலேயே வைத்து விடலாம் என்றும் தயாரிப்பு நிறுவனத்துகு ஏன் வீண் செலவு என படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சென்னையில் உள்ள தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தினால் தான் படத்தின் பிரம்மாண்ட வசூலுக்கு அது உறுதுணையாக இருக்கும் என பக்காவாக பிளான் போடப்பட்டு இருப்பதாகவும், வரும் செப்டம்பர் மாத இறுதியிலேயே லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் செப்டம்பர் தொடக்கத்தில் தெரியவரும் எனக் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X