Leo Audio Launch: “விஜய்க்காக திரண்ட 60,000 பேர்..” இதுதான் லியோ ஆடியோ லான்ச் சேன்சலாக காரணமா..?

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து இந்தப் படத்தில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

இதனிடையே இந்த வாரம் 30ம் தேதி நடைபெறவிருந்த லியோ இசை வெளியீட்டு விழா திடீரென கேன்சல் ஆனது. இதற்கான காரணங்கள் என்னவென்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

 Leo Audio Launch: This is the reason why Leo audio launch was cancelled

லியோ ஆடியோ லான்ச் கேன்சலாக காரணம்: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா கேன்சலானது கோலிவுட்டையே பரபரப்பாக்கியுள்ளது. விஜய் - லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள லியோ, அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாகிறது. இதனால், இந்தப் படத்தில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

இந்த வரிசையில் லியோ இசை வெளியீட்டு விழாவும் நடைபெறவிருந்தது. அதாவது வரும் 30ம் தேதி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த லியோ இசை வெளியீட்டு விழா, திடீரென ரத்து செய்யப்பட்டது. ரசிகர்கள் அதிகளவில் கூடினால் பாதுகாப்பு ஏற்பாட்டில் குழப்பம் வந்துவிடும் என இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டதாக படக்குழு தெரிவித்தது. மேலும் இதற்கு அரசியல் அழுத்தம் காரணமில்லை எனவும் குறிப்பிட்டிருந்தது.

இதனையடுத்து ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக பல ஹேஷ் டேக்குகளை ட்ரெண்ட் செய்து வந்தனர். அதுமட்டும் இல்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தினரும் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதனால் ரசிகர்களை கூல் செய்வதற்காக லியோ செகண்ட் சிங்கிள் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் லியோ இசை வெளியீட்டு விழா கேன்சல் செய்யப்பட்டதற்கான காரணங்கள் தெரிய வந்துள்ளன.

அதாவது, லியோ இசை வெளியீட்டு விழா ரத்தாக அரசியல் அழுத்தம் காரணம் இல்லை என்றே, வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன் ஆகியோர் கூறியுள்ளனர். மேலும், 6000 பேர் மட்டுமே பங்கேற்கக் கூடிய அளவிலான நேரு ஸ்டேடியத்தில், அளவுக்கு அதிகமாக ரசிகர்கள் கூடினால் பாதுகாப்பு இருக்காது என்றே ரத்து செய்யப்பட்டுள்ளதாம். லியோ இசை வெளியீட்டு விழாவில் 60,000 ரசிகர்கள் வரை கலந்துகொள்ளலாம் என தெரியவந்ததால் தான் விஜய் ரிஸ்க் வேண்டாம் என கேன்சல் செய்துவிட்டாராம்.

 Leo Audio Launch: This is the reason why Leo audio launch was cancelled

உளவுத்துறையின் அறிக்கை படியே 50,000 ரசிகர்கள் கலந்துகொள்ளலாம் என ரிப்போர்ட் சென்றுள்ளதாம். அதேபோல், இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசாமல் இருந்தால், அது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும் என விஜய் நினைத்துள்ளார். ஒருவேளை பேசவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், லியோ ரிலீஸுக்கு சிக்கல் எழலாம் என்பதும் விஜய்யின் சந்தேகமாம். அதனால் தான் இசை வெளியீட்டு விழா வேண்டாம் என்ற முடிவுக்கு விஜய் வந்துள்ளாராம்.

இன்னொரு பக்கம் லியோ இசை வெளியீட்டு விழாவில், லைவ் பெர்பாமன்ஸ் செய்ய முடியாது என அனிருத்தும் மறுப்புத் தெரிவித்து விட்டாராம். அனிருத்தின் இசை நிகழ்ச்சி இல்லையென்றால் அதுவும் ரசிகர்களுக்கு போரடித்து விடும் என்பதால் தான் அவசரமாக லியோ ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X