Leo Audio Launch: லியோ ஆடியோ வெளியீட்டு விழா எங்கே? எப்போ நடக்குது தெரியுமா?.. ஹாட் அப்டேட்!

சென்னை: ஜெயிலர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் டிரெண்டிங்கில் இருந்து வரும் நிலையில், அடுத்ததாக ஜெயிலரை விட வசூலில் அதிக சாதனையை படைக்க ஓவர்சீஸ் மார்க்கெட்டை குறிவைத்து ஆடியோ வெளியீட்டு விழாவையே பிரம்மாண்டமாக மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதற்காக தயாரிப்பாளர் லலித், நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டோர் மலேசியாவுக்கு விசிட் அடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leo Audio Launch Venue and Date details are here

இந்நிலையில், லேட்டஸ்ட்டாக லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளது.

லியோ ஆடியோ வெளியீட்டு விழா தேதி: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள லியோ படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், மலேசியாவில் வரும் அக்டோபர் 6ம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leo Audio Launch Venue and Date details are here

பிரம்மாண்ட அரங்கும் ரெடி: வாரிசு மற்றும் ஜெயிலர் படங்களின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிலையில், லியோ இசை வெளியீட்டு விழா மலேசியாவின் Axiata Arena Bukit Jalil, KUALA LUMPUR உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன. இதில், மொத்தமாக 16 ஆயிரம் பேருக்கான இருக்கைகள் இருப்பதாக கூறுகின்றனர். இந்த மிகப்பிரம்மாண்ட ஸ்டேடியத்தில் தான் தளபதி விஜய் குட்டிக் கதை சொல்லப் போகிறார்.

Leo Audio Launch Venue and Date details are here

67 நாள் தான் இருக்கு: தளபதி 67 படமான லியோ ரிலீஸாக இன்னும் 67 நாட்கள் தான் உள்ளது என விஜய் ரசிகர்கள் #Thalapathy67 ஹாஷ்டேக்கை தெறிக்கவிட்டு வருகின்றனர். லியோ படம் தமிழ் சினிமாவின் புதிய பாக்ஸ் ஆபிஸ் உச்சத்தை தொடும் என்றும் இந்த ஆண்டு எந்த நடிகரின் படம் அதிக வசூலை ஈட்டப் போகிறது என்கிற போட்டிக்கான விடையையும் லியோ கொடுக்கும் என விஜய் ரசிகர்கள் கெத்துக் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X