Leo Beat Jailer: ஜெயிலர், ஜவானை ஓவர்டேக் செய்த லியோ!! பாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்த விஜய்!

சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான லியோ, நேற்று திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் 140 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 Leo Beat Jailer: Vijays Leo overtakes Jailer, Jawan in box office collection

இது ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான் படங்களின் முதல் நாள் கலெக்‌ஷனை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ரஜினி - விஜய் ரசிகர்கள், யார் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற போட்டியில் களமிறங்கியுள்ளனர்.

ஜெயிலர், ஜவானை ஓவர்டேக் செய்த லியோ
விஜய்யின் லியோ திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக வெளியான லியோவுக்கு உலகம் முழுவதும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி வரை வசூலிக்கும் என சொல்லப்பட்டது.

அதன்படி முதல் நாளில் தரமான வசூலுடன், பாக்ஸ் ஆபிஸ் கணக்கை தொடங்கியுள்ளது லியோ. உலகம் முழுவதும் முதல் நாளில் 140 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம் லியோ. இதில் தமிழ்நாட்டில் மட்டுமே தமிழ்நாட்டில் 30 முதல் 35 கோடி ரூபாய் வரை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் கேரளாவில் 11 கோடி, கர்நாடகாவில் 14 கோடி, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் 15 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துள்ளதாம்.

இந்த தகவல்களின் படி லியோவுக்கு இந்தியாவில் 66 கோடி ரூபாய் வரை முதல் நாள் கலெக்‌ஷன் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் 140 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. ஆனாலும், இதுபற்றி படக்குழு தரப்பில் இருந்து அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. அதேநேரம் இது ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான் படங்களின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் ஆக்ஸ்ட் 10ம் தேதி சோலோவாக வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம், முதல் நாளில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்தது. அதேபோல், ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கிய ஜவான், முதல் நாளில் 129 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்தது. இந்த இரண்டு படங்களுமே சமீபத்தில் வெளியாகியிருந்தன.

அதனைத் தொடர்ந்து வெளியான விஜய்யின் லியோ, முதல் நாளிலேயே 140 கோடி ரூபாய் வரை வசூலித்து மரண மாஸ் காட்டியுள்ளது. இது கோலிவுட் படங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய ஓபனிங் என சொல்லப்படுகிறது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் விஜய் தான் கிங் என அவரது ரசிகர்கள் கம்பு சுத்தி வருகின்றனர். அதேநேரம் லியோவுக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளதால், இது ஜெயிலரின் மொத்த வசூலை முந்த வாய்ப்பில்லை என, சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் சவால் விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X