Leo vs Jailer: ஜெயிலரை முந்திய லியோ.. கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.. செய்கை அப்படி!

சென்னை: விக்ரம் படத்தின் வசூலை பொன்னியின் செல்வன் முந்துவதும், ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முந்துவதுமாக ஒட்டுமொத்தமாக கடந்த இரு ஆண்டுகளாக தமிழ் சினிமா வளர்ந்து வருவது தான் இதன் மூலம் கண்கூடாக தெரிகிறது என பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் இதுவரை எந்தவொரு தமிழ் சினிமாவும் செய்யாத வசூல் சாதனையை லியோ திரைப்படம் செய்து புதிய ரெக்கார்டை உருவாக்கி இருப்பதாக அஹிம்சா நிறுவனம் வெளியிட்ட போஸ்ட்டை லியோவுக்கு எதிராக ட்வீட் போட்டு வந்த ரமேஷ் பாலாவே வெளியிட்டு லியோவுக்கு பாராட்டு தெரிவித்து இருப்பதை பார்த்தால், லியோ டிசாஸ்டர் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்தவர்களின் வன்மம் எல்லாம் நெகட்டிவ் புரமோஷனாகவே மாறிவிட்டது தான் என எண்ண வேண்டியுள்ளது.

Leo beats Jailer at Book My Show ticket bookings

இங்கிலாந்து மட்டுமின்றி இந்தியாவில் புக் மை ஷோவிலும் ஜெயிலர் படம் செய்த சாதனையை லியோ முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயிலர் வசூல் சாதனை முறியடிப்பு: புக் மை ஷோவில் ஜெயிலர் திரைப்படம் 6 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையான நிலையில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 6 நாட்களில் 7 மில்லியன் டிக்கெட்டுகள் இதுவரை விற்பனையாகி இமாலய சாதனையை படைத்து இருப்பதாக புக் மை ஷோவின் COO ஆசிஷ் சக்‌ஷேனா அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இங்கிலாந்தில் நம்பர் ஒன்: தமிழ் சினிமா இதுவரை செய்யாத வசூல் வேட்டையை முதல் வாரத்திலேயே லியோ உலகம் முழுவதும் செய்து வரும் நிலையில், இங்கிலாந்தில் 1.36 மில்லியன் பவுண்ட் வசூல் செய்த படமாக லியோ மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செவன் ஸ்க்ரீன் சைலன்ட்: லியோவுக்கு எதிராக வசூல் கணக்கு எல்லாம் பொய் என்றும் டிக்கெட் புக்கிங்கில் மோசடி என சொல்லி வந்த ரமேஷ் பாலாவே லியோவின் வசூல் வேட்டையை பார்த்து மிரண்டுப் போயுள்ள நிலையில், 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ மட்டும் ஏன் அமைதியாக இருக்கிறது என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால், சீக்கிரமே தரமான சம்பவத்துடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் முடிவில் செவன் ஸ்க்ரீன் காத்துக் கொண்டிருப்பதாகவும் விஜய்யின் அனுமதிக்காக வெயிட் பண்ணி வருவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X