Leo: "குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி..” ஒரே நாளில் லியோவுக்கு வந்த சோதனை... ப்ளூ சட்டை மாறன் பஞ்ச்

சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ 19ம் தேதி ரிலீஸானது.

இந்தப் படம் முதல் இரண்டு நாட்களில் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங் இருந்தாலும், லியோவுக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.

இந்நிலையில், லியோ குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என ப்ளூ சட்டை மாறன் பஞ்ச் வைத்துள்ளது விஜய் ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது.

 Leo: Blue Sattai Maran Troll as Vijays Leo celebrated by family audience

லியோ குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி
விஜய் கேரியரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக லியோ உருவானது. மாஸ்டரை தொடர்ந்து இந்தப் படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ்ஜுடன் இரண்டாவது முறையாக இணைந்தார் விஜய். அதேநேரம் விஜய் - லோகேஷ் காம்போவின் முதல் LCU படமாகவும் லியோ அமைந்தது. இந்நிலையில் பான் இந்தியா ஜானரில் வெளியான லியோ, பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்துள்ளது.

முதல் நாளில் 148 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்தே அபிஸியல் அப்டேட் வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் ரொம்பவே உற்சாகத்தில் உள்ளனர். மேலும், கண்டிப்பாக லியோ ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையும் எனவும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். அதேநேரம் லியோவுக்கு ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

செய்யாறு பாலு, ப்ளூ சட்டை மாறன், வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன் உள்ளிட்ட பிரபல சினிமா விமர்சகர்கள் பலரும் லியோ எதிர்பார்த்த அளவில் இல்லை எனக் கூறியிருந்தனர். லியோ படப்பிடிப்பு தொடங்கியது முதலே இந்தப் படத்திற்கு அதிக ஹைப் ஏற்பட்டது. இது ரசிகர்களுக்கும் பெரிய ஏமாற்றமாகவே அமைந்தது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்துள்ள மீம்ஸ் வைரலாகி வருகிறது.

 Leo: Blue Sattai Maran Troll as Vijays Leo celebrated by family audience

அதில், லியோ குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. லியோ தோல்வியை சரிகட்டுவதற்காக ஃபேமிலி ஆடியன்ஸிடம் வரவேற்பு என ப்ரொமோஷன் தொடங்கிவிடும் என்பதாக இந்த மீம்ஸ் அமைந்துள்ளது. ஏற்கனவே தனது விமர்சனத்தில் லியோவில் ரசிக்கும்படி எதுவும் இல்லை எனக் கூறியிருந்தார்.

 Leo: Blue Sattai Maran Troll as Vijays Leo celebrated by family audience

அதிக எதிர்பார்ப்புடன் வெளியான லியோ, முதல் நாளில் இருந்தே ட்ரோல்களுக்கு உள்ளாகியுள்ளது. பீஸ்ட், வாரிசு படங்களுக்கு பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங் இருந்தாலும், விமர்சன ரீதியாக தோல்வியடைந்தது. அந்த வரிசையில் லியோவும் இணைந்துவிட்டதாக சினிமா ட்ராக்கர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X