Leo: "விஜய் நடிப்புக்கே 10 தடவ பாக்கலாம்... படம் நல்லா இருக்கா இல்லையா..” பத்த வச்ச ப்ளூ சட்டை மாறன்

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகும் முன்பே அதிக ஹைப் கொடுக்கப்பட்டது.

இதனால் லியோ படத்துக்கு முதல் நாளில் உலகம் முழுவதும் மிகப் பெரிய ஓபனிங் கிடைத்தது.

 Leo: Blue Sattai Maran trolled about Vijays acting in Leo

ஆனால், அடுத்தடுத்து வெளியான விமர்சனங்கள் லியோ படத்திற்கு நெகட்டிவாகவே அமைந்தன.

இந்நிலையில் விஜய் நடிப்புக்கே லியோவை பத்து தடவ பார்க்கலாம் என மீம்ஸ்ஸுடன் கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

பத்த வச்ச ப்ளூ சட்டை மாறன்

விஜய்யின் லியோ திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் 10ம் தேதி ரிலீஸானது. விஜய் - லோகேஷ் கூட்டணிக்காகவே இந்தப் படத்திற்கு தரமான ஓபனிங் கிடைத்தது. ஆனால், மேக்கிங்கில் மாஸ் காட்டிய லோகேஷ், கதை, திரைக்கதையில் சொதப்பிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால், விஜய் ரசிகர்களே ஏமாற்றம் அடைந்தனர்.

முதல் நாளில் 148 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால், அதன் பின்னர் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் குறித்து அபிஸியலாக எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. லியோ ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் எனக் கூறிவந்த விஜய் ரசிகர்கள், இப்போது ரஜினியின் ஜெயிலர் வசூலை பிரேக் செய்தால் போதும் என புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.

ஆயுத பூஜை விடுமுறைக்குப் பின்னர் லியோவின் வசூல் பெரிய அளவில் இருக்காது என்றே பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் லியோ படத்தின் நெகட்டிவ் விமர்சனங்கள் மீம்ஸ் வடிவிலும் வைரலாகி வருகின்றன. அப்படி ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்துள்ள ஒரு மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதில் ரோபோ சங்கர், ரவி மரியான் இருவரது காமெடி சீன் போட்டோவை வைத்து பங்கம் செய்துள்ளனர்.

"விஜய் நடிப்புக்கே பத்து தடவ பார்க்கலாம்" எனவும், அதற்கு "அந்த கதையலா கேட்கல, படம் நல்லா இருக்கா நல்லா இல்லையா.."ன்னு மட்டும் சொல்லு என்பதாக கிரியேட் செய்யப்பட்டுள்ளது. ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்துள்ள இந்த மீம்ஸ்க்கு விஜய் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். "லியோ நல்லா இருந்தா உடனே பாசிட்டிவ் ரிவியூவ் கொடுத்துருப்பீங்களா" எனவும் அவரை வம்பிழுத்து வருகின்றனர்.

முன்னதாக லியோ குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்ற மீம்ஸ்ஸை ஷேர் செய்திருந்தார் ப்ளூ சட்டை மாறன். அதுவும் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் தற்போது அடுத்த ரவுண்டில் இறங்கிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X