Leo: “குமாரு யார் இவரு? ரொம்ப வாசிக்குறாரே.." லியோ வசனகர்த்தாவை சுளுக்கெடுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.
இதனையடுத்து லியோ ட்ரெய்லர் நாளை (அக்.5) வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.

இந்நிலையில் லியோ ட்ரெய்லர் குறித்து படத்தின் வசனகர்த்தா தீரஜ் வைத்தி ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக "குமாரு யார் இவரு? ரொம்ப வாசிக்குறாரே" என்று டிவிட்டரில் வம்பிழுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
லியோ வசனகார்த்தாவை சுளுக்கெடுத்த ப்ளூ சட்டை
விஜய் - லோகேஷ் காம்போவில் உருவாகியுள்ள லியோ படத்துக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மாஸ்டர் படத்தை விடவும் லியோவில் இக்கூட்டணியின் சம்பவம் தரமாக இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். அதற்கேற்றபடி விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் என பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் லியோ உருவாகியுள்ளது.

லியோ படத்தை ப்ரொமோஷன் செய்வதற்காக ஆடியோ லான்சை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக லியோ இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக படக்குழு அறிவித்தது. இதனால், லியோ ட்ரெய்லரை சென்னையின் முக்கியமான இடங்களில் பிரம்மாண்டமாக ஸ்க்ரீனிங் செய்யப்படும் என படக்குழு அறிவித்தது. ஆனால், தற்போது அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, லியோ படத்தின் வசனகர்த்தா தீரஜ் வைத்தி ட்ரெய்லர் பற்றி ட்விட்டரில் அப்டேட் கொடுத்திருந்தார். சித்தார்த்தின் ஜில் ஜங் ஜக் படத்தை இயக்கி பிரபலமான தீரஜ் வைத்தி. லியோவில் வசனம் எழுதியுள்ளார். அவர் தனது டிவிட்டரில் "Just met Lokesh and saw the trailer! Trailer பாத்ததும் உங்க தாவம்பட்டை எல்லாம் தரைல தான் இருக்கும்" என குறிப்பிட்டுருந்தார். இன்னொரு பதிவில், லியோ ட்ரெய்லர் அப்டேட் போஸ்டரை ஷேர் செய்து, "இந்த சீனில் என்ன ஆகப் போறீங்களோ" என பதிவிட்டிருந்தார்.
லியோ வசனகர்த்தா தீரஜ் வைத்தியின் இந்த டிவிட்டர் பதிவுகள் வைரலாகி வந்தன. இதனைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன் தீரஜ் வைத்தியை தனது ஸ்டைலில் பங்கமாக கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார். அதில், "குமாரு.. யார் இவரு? ரொம்ப வாசிக்குறாரே" என பங்கம் செய்துள்ளார். லியோ ட்ரெய்லருக்கு பில்டப் கொடுப்பதற்காக, படத்தின் வசனகர்த்தா இப்படி ட்வீட் செய்துள்ளதை ரசிகர்களும் கலாய்த்துள்ளனர்.
"காசா பணமா அடிச்சி விடுறது தானே", "டயலாக் ரைட்டர்ன்னு சொல்றாங்க உண்மையான்னு தெரியல, ஆனால் ரொம்ப கூவுது" என விதவிதமாக கமெண்ட்ஸ் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் ப்ளூ சட்டை மாறனின் டிவிட்டர் பதிவுக்கு விஜய் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











