Leo: “லியோ வசூல் சாதனை... ஜெயிலர் வடை வாயன்களுக்கு வயிறு எரியட்டும்..” கொளுத்திப் போட்ட ப்ளூ சட்டை
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
இதனையடுத்து இந்தப் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் தமிழ்நாடு உட்பட பல இடங்களில் தொடங்கியது.
முக்கியமாக இங்கிலாந்தில் லியோ ரிலீஸ் தேதிக்கு 6 வாரங்களுக்கு முன்பே அட்வான்ஸ் புக்கிங் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் லியோவின் வசூல் சாதனையை குறிப்பிட்டு, ரஜினியை ட்ரோல் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
ஜெயிலர் வடை வாயன்களுக்கு வயிறு எரியட்டும்
விஜய் - லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் லியோ. முன்னதாக இதே கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பின்னர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கினார் லோகேஷ். மல்டி ஸ்டார்ஸ் படமாக வெளியான விக்ரம், கடந்தாண்டு ரிலீஸாகி 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது.
விக்ரம் வெளியானதும் தான் விஜய்யுடன் மீண்டும் இணைந்தார் லோகேஷ் கனகராஜ். வாரிசு ரிலீஸானதும் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் லியோ பற்றி அபிஸியல் அப்டேட் வெளியானது. அதேவேகத்தில் படப்பிடிப்பை நடத்திய லோகேஷ், தற்போது லியோ ரிலீஸுக்கும் ரெடியாகிவிட்டார். அதன்படி இந்தப் படம் அடுத்த வாரம் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. மேலும், லியோ ட்ரெய்லர் உட்பட சில முக்கியமான அப்டேட்களும் வெளியாகின.
இந்நிலையில், அடுத்த வாரம் வெளியாகும் லியோ படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் தொடங்கியுள்ளது. சென்னை, கோவை, மதுரை, நெல்லை போன்ற ஏரியாக்களில் உள்ள சில திரையரங்குகள் மட்டும், லியோ அட்வான்ஸ் புக்கிங்கை தொடங்கிவிட்டன. அதேநேரம் இங்கிலாந்தில் லியோ தியேட்டர் ரைட்ஸை அஹிம்ஸா என்டர்டெயின்மெண்ட் வாங்கியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் லியோ ரிலீஸ் தேதிக்கு 6 வாரங்கள் முன்பே அட்வான்ஸ் புக்கிங்கையும் தொடங்கிவிட்டது.
இதனையடுத்து முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங்கில் லியோ சாதனை படைத்துள்ளதாக அஹிம்ஸா என்டர்டெயின்மெண்ட் அறிவித்திருந்தது. அதாவது இந்திய திரைப்படங்களில் இதுவரை லியோ தான் முதல் நாள் டிக்கெட் புக்கிங்கில் சாதனை படைத்துள்ளதாக தெரிவித்திருந்தது. இதன் மூலம் ஷாருக்கானின் பதான் படத்துக்கான அட்வான்ஸ் புக்கிங் சாதனையை லியோ பிரேக் செய்துள்ளது. இதனால் விஜய் உட்பட லியோ குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் லியோவின் இந்த அட்வான்ஸ் புக்கிங் சாதனையை குறிப்பிட்டு, ரஜினியையும் அவரது ரசிகர்களையும் ட்ரோல் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இதுபற்றி ட்வீட் செய்துள்ள ப்ளூ சட்டை, "Fake news என்று கூறிய ஜெயிலர் வடை வாயன்களுக்கு.. நல்லா வயிறு எரியட்டும்டா. Ahimsa Entertainment is the official distribution house in UK. வடைசட்டி நொறுங்குது" என பதிவிட்டுள்ளார். அதாவது ரஜினியின் ஜெயிலர் வசூலை லியோ துவம்சம் செய்துவிட்டது என ஜாடைமாடையாக கூறி ட்ரோல் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











