Blue Sattai Maran: “தம்பி தேங்கா பத்தை சாப்பிடுங்கள்..” விஜய்க்கு விபூதி அடித்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இதனையடுத்து லியோ ட்ரெய்லரை படக்குழுவினர் நேற்று மாலை வெளியிட்டனர்.
இதில் விஜய் பேசிய சில கெட்ட வார்த்தைகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதனை தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், விஜய்யையும் அவரது ரசிகர்களையும் கலாய்த்துள்ளார்.

விஜய்க்கு விபூதி அடித்த ப்ளூ சட்டை
விஜய்யின் லியோ படத்துக்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் இது என்பதால், ரசிகர்கள் எதிர்பார்ப்பின் உச்சத்தில் உள்ளனர். அதுமட்டும் இல்லாமல் லியோ லோகேஷின் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் லியோ படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. பக்கா ஆக்ஷன் ட்ரீட்டுடன் வெளியான இந்த ட்ரெய்லர், விஜய் ரசிகர்கள் செம்ம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இதில் விஜய்க்கு இரண்டு கேரக்டர் என்பதும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. அதேபோல், த்ரிஷா வில்லியாக நடித்துள்ளார் என முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், அதுவும் இப்போது வதந்தி என்றும், விஜய்யும் த்ரிஷாவும் ஜோடியாக நடித்துள்ளதும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது.
இதனிடையே லியோ ட்ரெய்லரில் அளவுக்கதிகமான வன்முறை காட்சிகள் இருப்பதாகவும், வசனங்களில் கெட்ட வார்த்தைகள் அதிகம் உள்ளன என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், விஜய், லோகேஷ் கனகராஜ் மீது கடும் விமர்சனங்களும் எழுந்தன. முக்கியமாக காதுகூசும் அளவிற்கு பச்சையாக கெட்ட வார்த்தை பேசியிருந்தார் விஜய்.
மக்கள் நலப் பணி, மாணவர்களுக்கு கல்வி நிதி, விரைவில் அரசியல் பயணம் என திட்டமிட்டுள்ள விஜய், இப்படியெல்லாம் வசனங்கள் பேசலாமா என சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியிருந்தனர். இதனையடுத்து ப்ளூ சட்டை மாறனும், தற்போது சாட்டையை சுழற்றியுள்ளார். இதுபற்றி ட்வீட் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், விஜய்யை கலாய்த்து ஒரு வீடியோவையும் ஷேர் செய்துள்ளார்.
அதில், "Vijay during audio launch and fans meet:
நண்பா.. நண்பி. குட்டிஸ். நல்லா இருக்கீங்களா? குடும்பத்த பாத்துக்கங்க. நல்ல விஷயங்களை தேடிப்படிங்க. ஒழுக்கம் முக்கியம்.
2. Vijay in movies:
*த்தா.. யார்றா அந்த தே**யா பையன்? என்னை மாதிரியே இருக்கான். *ம்மால.
தம்பி. தேங்கா பத்தை சாப்பிடுங்கள். வாழ்க வளமுடன்" என குறிப்பிட்டுள்ளார்.
அதாவது இசை வெளியீட்டு விழா, ரசிகர்கள் சந்திப்பில், மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்யும் விஜய், படங்களில் மட்டும் கெட்ட வார்த்தை ரசிகர்களை டெம்ப்ட் செய்வதாக விமர்சித்துள்ளார். இந்த விமர்சனத்துடன் அவர் ஷேர் செய்துள்ள வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











