Leo Box Office Day 1: கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் ரெக்கார்ட் பிரேக்... லியோ முதல் நாள் வசூல் ரிப்போர்ட்
சென்னை: விஜய் நடித்த லியோ திரைப்படம் நேற்று முதல் திரையரங்குகளில் வெளியானது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் LCU-ன் கீழ் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால், உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் லியோவுக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.
அதன்படி, தமிழ்நாடு உட்பட அனைத்து ஏரியாக்களையும் சேர்த்து மொத்தம் 140 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லியோ முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்:விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ திரைப்படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதன்படி நேற்று வெளியான இந்தப் படத்துக்கு உலகம் முழுவதும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், கெளதம் மேனன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகியுள்ள லியோ, LCU-ன் கீழ் உருவாகியுள்ளதும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. அதேநேரம் பெரும்பாலான ரசிகர்கள் முதல் பாதி சூப்பர் எனவும், இரண்டாம் பாதியில் லோகேஷ் சொதப்பிவிட்டதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல், விஜய்யின் ஆக்டிங், ஆக்ஷன், டான்ஸ் எல்லாம் நன்றாக இருந்தாலும், திரைக்கதையில் லோகேஷின் மேஜிக் மிஸ்ஸிங் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், லியோவுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை என்பதால், லியோ பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். முதல் நாளில் லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி, லியோ உலகம் முழுவதும் 140 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழ்நாட்டில் 30 முதல் 35 கோடி ரூபாய் வரை லியோ வசூல் செய்துள்ளதாம். முன்னதாக 40 கோடி வரை கலெக்ஷன் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. கேரளாவில் முதல் நாள் வசூல் 11 கோடி எனவும், கர்நாடகாவில் 14 கோடி என்றும், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் 15 கோடி ரூபாய் எனவும், மற்ற மாநிலங்களில் 5 முதல் 8 கோடி வரையும் வசூல் செய்துள்ளதாம்.
இதனடிப்படையில் இந்தியாவில் மட்டும் லியோ முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 63 முதல் 66 கோடி ரூபாய் வரை என சொல்லப்படுகிறது. மேலும் உலகம் முழுவதும் மொத்தமாக சேர்த்து 140 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாம் லியோ. இது கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸில் ரெக்கார்ட் பிரேக் என சொல்லப்படுகிறது. ஆனால், லியோ முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











