Leo Box Office: "லியோ பாக்ஸ் ஆபிஸ் நினைச்சு நான் ஏன் கவலைப்படணும்.." லோகேஷ் ஓபன் ஸ்டேட்மெண்ட்
சென்னை: விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி ரிலீஸாகிறது.
இந்தப் படத்திற்கு தமிழ்நாட்டில் ஸ்பெஷல் ஷோ திரையிட அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இதனால், லியோ பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதுபற்றி பேசிய லோகேஷ் கனகராஜ், லியோ பாக்ஸ் ஆபிஸ் குறித்து நான் கவலைப்பட மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

லியோ பாக்ஸ் ஆபிஸ் நினைத்து கவலைப்பட மாட்டேன்
விஜய்யின் லியோ படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, வரும் 19ம் தேதி முதல் 24 வரை லியோ படம் 5 காட்சிகள் திரையிடப்படும். ஆனால், முதல் நாளில் அதிகாலை 4 மணி FDFS உள்ளதா என்பது பற்றி இதுவரை தகவல் இல்லை. முன்னதாக ரஜினியின் ஜெயிலர் படத்துக்கு ஸ்பெஷல் ஷோ அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது வெளியாகும் படங்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தான் பெரிய கெளரவ பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு 100 கோடி வசூல் என்பதே பெரிய சாதனையாக இருந்தது. ஆனால், தங்கல், பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப், பதான், ஜவான் போன்ற மற்ற மொழி படங்கள் ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை படைத்தன. கோலிவுட்டில் இந்த சாதனை இன்னும் கை கூடவில்லை.
இதனிடையே கடந்தாண்டு வெளியான கமல்ஹாசனின் விக்ரம், 600 கோடிக்கும் மேல் கலெக்ஷன் செய்தது. அதேபோல், சமீபத்தில் ரிலீஸான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலரும் 600 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இன்னொருபக்கம் ஜவான் மூலம் பாலிவுட்டில் என்ட்ரியான அட்லீ, ஆயிரம் கோடி வசூலித்த முதல் கோலிவுட் இயக்குநர் என்ற சாதனை படைத்தார். இதனால், லியோ திரைப்படம் மூலம் லோகேஷ் கனகராஜ் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் இயக்குநர் என மாஸ் காட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதுபற்றி லோகேஷ் கனகராஜ்ஜே விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி நான் எப்போதுமே கவலைப்பட மாட்டேன் எனக் கூறியுள்ளார். சம்பளம் வாங்கிவிட்டு தான் நான் படம் இயக்குகிறேன். அதனால், எனக்கு பாக்ஸ் ஆபிஸில் வரும் வசூலால் எந்த லாபமும் கிடைக்கப் போவதில்லை. அப்படி இருக்கும் போது நான் ஏன் லியோ வசூல் பற்றி யோசிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெயிலர், ஜவான் படங்களின் வசூலை லியோ முந்திவிடும் என நான் எதிர்பார்க்கமாட்டேன் என ஓபனாக பேசியுள்ளார் லோகேஷ் கனகராஜ். லியோவுக்கு ஸ்பெஷல் ஷோ திரையிட அனுமதி கிடைத்துள்ளதால், இந்த படம் நிச்சயம் ஆயிரம் கோடி வசூலிக்கும் என கோலிவுட் விமர்சகர்கள் பந்தயம் கட்டி வருகின்றனர். ஆனால் லோகேஷ் அதற்கு பிடிகொடுக்காமல் பேசியது விஜய் ரசிகர்களிடம் ஜெர்க் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications