twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல் 1000 கோடி பிளஸ் இண்டஸ்ட்ரி ஹிட்... விஜய்யின் லியோ படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு?

    |

    சென்னை: விஜய்யின் லியோ பட சூட்டிங் காஷ்மீர் பகுதிகளில் வேகமாக நடைபெற்று வருகிறது.

    மொத்தம் 2 மாதங்கள் வரை லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

    முன்னதாக தளபதி 67 என்ற டைட்டிலுடன் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் முழுமையான அப்டேட்டை படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டது.

    இந்நிலையில், விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் கோலிவுட்டில் முதல் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தளபதியின் 'லியோ' படத்தின் மற்றுமொரு சுவாரசிய தகவல்.. த்ரிஷாவின் மகிழ்ச்சிக்கு காரணம் இதுதானா?தளபதியின் 'லியோ' படத்தின் மற்றுமொரு சுவாரசிய தகவல்.. த்ரிஷாவின் மகிழ்ச்சிக்கு காரணம் இதுதானா?

     விஜய் - லோகேஷ் காம்போவில் லியோ

    விஜய் - லோகேஷ் காம்போவில் லியோ

    மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்த தளபதி 67க்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. லோகேஷின் படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருவதோடு, அவர் கடைசியாக இயக்கிய விக்ரம் செய்த வசூல் சாதனையும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் லோகேஷ் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் தான் விஜய் நடிக்கும் தளபதி 67ம் உருவாகவுள்ளதாக சொல்லப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தளபதி 67 டைட்டில் லியோ என அறிவித்த படக்குழு செம்ம மாஸ்ஸான ப்ரோமோவையும் வெளியிட்டது.

     விக்ரம் பாணியில் லியோ ப்ரோமோ

    விக்ரம் பாணியில் லியோ ப்ரோமோ

    இந்த வீடியோ அச்சு அசல் விக்ரம் படத்தின் டைட்டில் ப்ரோமோவை போலவே இருந்தது. அதுமட்டும் இல்லாமல் கைதி படத்தில் நடித்த ஜார்ஜ் மரியன், விக்ரமில் ஏஜெண்ட் டினாவாக ஆக்‌ஷனில் மிரட்டிய ஏஜெண்ட் டினாவும் லியோ படத்தில் இணைந்துள்ளனர். இதனால், இந்தப் படம் கண்டிப்பாக லோகேஷ் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் தான் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் லியோ மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

     முதல் ஆயிரம் கோடி!

    முதல் ஆயிரம் கோடி!

    லோகேஷ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இந்தப் படம் தவிர மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 600 கோடி வரையும், ரஜினியின் 2.O ரூ.800 கோடியும் வசூலித்துள்ளன. கோலிவுட்டில் அதிகபட்ச வசூல் சாதனையாக இந்தப் படங்கள் தான் டாப்பில் உள்ளன. ஆனால் இந்தாண்டு லியோ திரைப்படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷின் LCU கான்செப்ட்டும் விஜய்யும் தான், லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டும் என சொல்லப்படுகிறது.

     சம்பவம் லோடிங்...

    சம்பவம் லோடிங்...

    தெலுங்கில் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர், கன்னடத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப், பாலிவுட்டில் அமீர்கானின் தங்கலான் ஆகிய படங்கள் ஆயிரம் கோடி வசூலை கடந்துள்ளன. அந்த சாதனைகளை விஜய் - லோகேஷ் கனகராஜ் காம்போவில் லியோ திரைப்படம் தகர்க்கும் என சினிமா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தளபதி 67க்கு லியோ என்ற டைட்டிலுடன் ப்ரோமோவையும் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துவிட்டது. அதன்படி இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. முன்னதாக லியோ திரைப்படம் ரிலீஸாகும் முன்பே ப்ரீ-ரிலீஸ் மூலம் ரூ.246 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The film crew announced that Thalapathy 67 starring Vijay is titled Leo. The film is releasing on 19th October on the occasion of the Ayudha Pooja holiday. It has been reported that Leo movie has collected Rs 250 crores through pre-release business with satellite and OTT rights. This movie is expected to collect 1000 crores at the box office.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X