Leo Box Office: ரஜினியின் ஜெயிலரை ஓரங்கட்டிய லியோ... கேரளா பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை!!

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த வாரம் 19ம் தேதி வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ பான் இந்தியா படமாக 5 மொழிகளில் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் உள்ள கேரளாவில் முதல் நாளில் இருந்தே தரமான ஓபனிங் கிடைத்தது.

இந்நிலையில், லியோ திரைப்படம் கேரள பாக்ஸ் ஆபிஸில் ரஜினியின் ஜெயிலரை ஓவர்டேக் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 Leo Box Office: Vijays Leo enters the 50 Crore Gross Box Office Club in Kerala

கேரளாவில் லியோ வசூல் சாதனை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் சென்ற வாரம் வெளியானது. விஜய் - லோகேஷ் கூட்டணியின் இரண்டாவது படமாக லியோ வெளியாகியுள்ளது. முன்னதாக இதே கூட்டணி மாஸ்டர் படத்தில் இணைந்திருந்தனர். இந்தமுறை LCU-ன் கீழ் லியோ படத்தை இயக்கியதுடன், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன் என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் களமிறங்கியது.

இதனால், லியோ பற்றிய அறிவிப்பு வெளியான நாள் முதலே இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதன்படி, படக்குழுவும் அடிக்கடி ஹைப் கொடுத்து வந்தனர். முக்கியமாக லியோ ரிலீஸுக்கு முந்தைய ப்ரொமோஷன் பேட்டிகளில் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் இருவரும் படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருப்பதாகக் கூறியிருந்தனர். இதுவும் லியோ படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கில் மிகப் பெரிய ஓபனிங் கொடுத்தது.

முக்கியமாக தமிழ்நாட்டை விடவும் கேரளாவில் லியோவுக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. கேரளாவின் செல்லப்பிள்ளையான விஜய்க்கு, அங்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். இதனால், கேரளாவில் அதிகாலை 4 மணி FDFS காட்சிக்கும் அனுமதி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் முதல் நாளிலேயே கேரளாவில் 10 கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டியது லியோ. அதன்பின்னர் படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்கள் வந்ததால், கேரளாவில் வசூல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தொடர்ந்து வசூல் மழையில் சுழன்றடித்த லியோ, இதுவரை 50 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துள்ளதாக கேரள பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் கேரளாவில் 50 கோடி வசூலித்த இரண்டாவது தமிழ்ப் படம் என்ற சாதனைப் படைத்துள்ளது லியோ. முன்னதாக ரஜினியின் ஜெயிலர் கேரளாவில் 50 கோடி கலெக்‌ஷன் செய்தது. அந்தப் படத்தில் ரஜினியுடன் மோகன்லால் கேமியோ ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், லியோ விஜய்க்காக மட்டுமே சம்பவம் செய்துள்ளதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேபோல் ஜெயிலரை விடவும் விஜய்யின் லியோ அதிவேகமாக 50 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. கேரளாவில் திரையரங்க உரிமையாளர்களுக்கு 40% வரை ஷேர் கொடுத்துள்ளதால், தொடர்ந்து லியோ படத்தின் காட்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X