Leo Box Office: “600 கோடி ஒருதரம்..” பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலருக்கு டஃப் கொடுத்த லியோ.. விஜய்ண்ணா மாஸ்!

சென்னை: தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம், கடந்த மாதம் வெளியானது. ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படத்துக்கு முதல் நாளில் சிறப்பான ஓபனிங் கிடைத்தது.

அதன்பின்னர் கலவையான விமர்சனங்கள் கிடைத்ததுடன், ட்ரோல்களும் அதிகளவில் வைரலாகின. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து மாஸ் காட்டிய லியோ, இதுவரை 600 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leo Box Office: Vijays Leo has achieved 600 cr gross at the box office

பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி வசூலித்த லியோ
விஜய் நடிப்பில் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான வாரிசு 350 கோடி ரூபாய் வரை வசூலித்தது. ஆனால் அதனைத் தொடர்ந்து விஜய் நடித்த லியோ படம் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்தது. இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது முதலே, கோலிவுட்டின் ஹாட் டாப்பிக் லியோ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் - லோகேஷ் கனகராஜ் காம்போ, சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, கெளதம் மேனன், மிஷ்கின் என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம், LUC ஜானர் படம் என லியோவின் மார்க்கெட் வேல்யூ ஏகத்துக்கும் எகிறியது. இதனால், கோலிவுட்டில் முதல் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் சாதனையை லியோ படைக்கும் என சினிமா விமர்சகர்கள் அடித்துக் கூறினர்.

இந்நிலையில் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸான லியோவுக்கு முதல் நாளில் சிறப்பான ஓபனிங் கிடைத்தது. ஆனால், நெகட்டிவான விமர்சனம், ட்ரோல்கள் என லியோவுக்கு விபூதி அடித்தனர் நெட்டிசன்கள். கதை, திரைக்கதை, மேக்கிங் என மொத்தமாக சொதப்பிய லோகேஷ், மூடநம்பிக்கை என்ற கான்செப்ட்டை கொண்டு வந்து லியோவை பங்கம் செய்துவிட்டார். இதனால் அதிக எதிர்பார்ப்பில் படம் பார்த்த ரசிகர்கள், விட்டா போதும் என தெறித்து ஓடினர்.

இதெல்லாம் ஒருபக்கம் இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் லியோவின் வசூல் தாறுமாறாக இருந்தது. முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூலித்த லியோ, அடுத்தடுத்த நாட்களிலும் ஓரளவு நியாயமாக கலெக்‌ஷன் செய்தது. அதேநேரம் ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு வாய்ப்பில்லை என்பதும் உறுதியானது. இந்நிலையில் லியோ திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 600 ரூபாய் வசூலை நெருங்கிவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், தமிழ்நாட்டில் மட்டும் 215 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். ஆகஸ்ட் மாதம் வெளியான ரஜினியின் ஜெயிலர் திரைப்படமும் 600 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால் படக்குழு தரப்பில் வெளியிட்ட கடைசி அபிஸியல் அப்டேட்டில் 525 கோடி என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் ஜெயிலர் வசூலை லியோ தாண்டிவிட்டது என விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதேபோல், லியோ பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து அபிசியல் அப்டேட் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X