Leo Box Office: லியோவின் அடுத்த வசூல் சாதனை... தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூல் இத்தனை கோடியா?

சென்னை: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

இருப்பினும் உலகம் முழுவதும் 550 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் லியோ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Leo Box Office: Vijays Leo has also achieved 200 cr gross in TamilNadu

லியோவின் அடுத்த வசூல் சாதனை: விஜய் - லோகேஷ் காம்போவில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய லியோ, அக்டோபர் 19ம் தேதி ரிலீஸானது. லலித் குமார் தயாரிப்பில் அனிருத் இசையமைத்த இந்தப் படம், LCU-ன் உருவானது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

லியோ அப்டேட் வெளியானது முதலே இந்தப் படத்துக்கு நாளுக்கு நாள் ஹைப் கூடிக்கொண்டே வந்தது. மேலும் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியானதால், முதல் ஒரு வாரத்திற்கு லியோ டிக்கெட் புக்கிங் மாஸ் காட்டியது. ஆனால், முதல் நாளில் மட்டுமே சிறப்பான ஓபனிங் இருந்தது. அடுத்தடுத்து வெளியான நெகட்டிவான விமர்சனங்களால் லியோ படத்திற்கு வரவேற்பு குறைந்ததாக சொல்லப்பட்டது.

இதனிடையே லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய், த்ரிஷா, அர்ஜுன், லோகேஷ் கனகராஜ், லலித் குமார் உள்ளிட்ட பிரபலங்களும் ரசிகர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி நாளை மாலை சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழ்நாட்டில் லியோ படத்தின் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, லியோ வெளியானது முதல் இதுவரை உலகம் முழுவதும் 550 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயிலருக்குப் பிறகு இந்தாண்டு தமிழ்நாட்டில் 200 கோடி வசூலை கடந்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது லியோ. அதேபோல் கேரளாவில் 60 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாம்.

ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையும் முதல் தமிழ்ப் படமாக லியோ இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என தயாரிப்பாளர் லலித் குமாரே கூறியிருந்தார். இந்நிலையில் அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை இருப்பதால், ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்கள் ரிலீஸாகின்றன. அதன்பின்னர் லியோ கலெக்‌ஷன் குறைந்துவிடும் என்றே சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X