Leo Box Office: ”பல ராஜாக்கள பார்த்தாச்சுமா..” லியோ முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ்... ரெக்கார்ட் பிரேக்!

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த வாரம் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் LCU படமாக வெளியான லியோவுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் பாக்ஸ் ஆபிஸில் செம்ம மாஸ் ஓபனிங் பெற்றது.

 Leo Box Office: Vijays Leo has collected Rs 461 crores on its first week

இந்நிலையில் லியோ படத்தின் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது.

லியோ முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ கடந்த வாரம் 19ம் தேதி ரிலீஸானது. இக்கூட்டணியின் முதல் LCU படமாக வெளியான லியோவுக்கு, ரசிகர்களிடம் மிகப் பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது. விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன், ப்ரியா ஆனந்த், வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

விஜய்யின் முதல் LCU மூவி, பிரம்மாண்டமான மல்டி ஸ்டார்ஸ் படமாக லியோ வெளியானதால், முதல் நாளில் இருந்தே தரமான ஓபனிங் கிடைத்தது. தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளில் அதிகாலை 4 மணிக்கே லியோ ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டது. இதன் காரணமாக ஒரே நாளில் உலகம் முழுவதும் 148 கோடி ரூபாய் வசூலித்தது லியோ. இதனை தயாரிப்பு நிறுவனமே அபிஸியலாக அறிவித்திருந்தது.

இதுதான் கோலிவுட்டில் முதல் நாளில் அதிகம் வசூல் சாதனை செய்த படம் என்ற பெருமையை பெற்றது. இதனால் அடுத்தடுத்த நாட்களிலும் லியோவின் கலெக்‌ஷன் தாறுமாறாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படக்குழு தரப்பில் இருந்து அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் லியோ படத்தின் ஒரு வாரம் வசூல் பற்றி தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

 Leo Box Office: Vijays Leo has collected Rs 461 crores on its first week

அதன்படி, லியோ வெளியான 7 நாட்களில் 461 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. "பல ராஜாக்கள பார்த்தாச்சு மா... நீ ஒரசாம ஓடிடு.." என்ற கேப்ஷனுடன் இந்த அப்டேட்டை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் முதல் 7 நாட்களில் அதிகம் வசூலித்த படம் லியோ தான் என்பதையும் தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X